News August 21, 2025
அபார வளர்ச்சி கண்ட CSK வீரர்

ஆஸி., தொடருக்கு முன்னதாக 101-வது இடத்தில் இருந்தார் SA மற்றும் CSK வீரருமான டெவால்டு பிரேவிஸ். ஆஸி., தொடரில் தனது அதிரடி ஆட்டத்தை காண்பித்ததால், தற்போது சிறந்த T20 பேட்ஸ்மேன் பட்டியலில் 12-வது இடத்தைப் பிடித்துள்ளார். இது அவரின் சிறந்த தரநிலையாகும். பிரேவிஸின் இந்த ஃபார்ம் CSK ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது. அபிஷேக் சர்மா, திலக் வர்மா முதலிரண்டு இடங்களில் தொடர்கின்றனர்.
Similar News
News August 21, 2025
டெல்லி CM-க்கு Z பிரிவு பாதுகாப்பு

தலைநகரில் தாக்குதலுக்கு உள்ளான டெல்லி CM ரேகா குப்தாவுக்கு மத்திய அரசு Z பிரிவு பாதுகாப்பு வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்பிரிவில் தேசிய பாதுகாப்பு படையை சேர்ந்த 4-6 வீரர்கள் உள்பட 22 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர். இதோடு, ஒரு புல்லட் புரூஃப் வாகனம் உள்பட 5 வாகனங்களும் பயன்படுத்தப்படுகின்றன. இதற்கு மாதம் ₹16 லட்சம் வரை செலவாவதாக கூறப்படுகிறது.
News August 21, 2025
ரஜினி வரலாற்றில் முதல்முறை .. வசூல் சாதனை

லோகேஷ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான ‘கூலி’ வசூல் சாதனை படைக்கிறது. குறிப்பாக, விஜய்யின் ‘GOAT’ படத்தின் வசூலை முறியடித்து, கூலி ₹500 கோடியை நெருங்கியுள்ளது. கலவையான விமர்சனங்கள் வந்தபோதும் உலகளவில் வசூல் மட்டும் குறையவே இல்லை. ரஜினி சினிமா வரலாற்றில் இது புதிய மைல்கல். ஓரிரு நாள்களில் ₹500 கோடி வசூலை தாண்டிவிடும் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
News August 21, 2025
பொது அறிவு வினா- விடை

கேள்விகள்:
1. இந்தியாவின் முதல் தலைமை தேர்தல் ஆணையர் யார்?
2. ஆங்கிலேயர்கள் எப்போது இந்தியாவிற்கு வந்தனர்?
3. உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேன் என பாடியவர் யார்?
4. செம்மொழி அந்தஸ்து பெற்ற முதல் இந்திய மொழி எது?
5. கராத்தே என்பதன் பொருள் என்ன?
சரியான பதில்களை கமெண்ட் பண்ணுங்க. பதில்கள் மதியம் 2 மணிக்கு Way2News-ல் வெளியாகும்.