News August 21, 2025
இன்றைய நல்ல நேரம்

▶ஆகஸ்ட் 21 – ஆவணி 5 ▶ கிழமை: வியாழன் ▶ நல்ல நேரம்: 12:00 AM – 1:00 AM ▶ கெளரி நல்ல நேரம்: 6:30 PM – 7:30 PM ▶ராகு காலம்: 1:30 PM – 3:00 PM ▶ எமகண்டம்: 6:00 AM – 7:30 AM ▶ குளிகை: 9:00 AM – 10:30 AM ▶ திதி: திதித்துவம் ▶ சூலம்: தெற்கு ▶பரிகாரம்: தைலம் ▶பிறை: தேய்பிறை.
Similar News
News February 7, 2026
குடிநீர் பாட்டிலில் மைக்ரோ பிளாஸ்டிக்.. HC புதிய உத்தரவு

பிளாஸ்டிக் பாட்டில் மட்டுமின்றி பாக்கெட்டில் அடைக்கப்படும் உப்பு, சர்க்கரையில் மைக்ரோ பிளாஸ்டிக் இருப்பது FSSAI-ன் முதற்கட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. இதுகுறித்த வழக்கை விசாரித்த சென்னை HC, பிளாஸ்டிக் பாட்டிலில் மைக்ரோ பிளாஸ்டிக் உள்ளது குறித்த எச்சரிக்கை வாசகம் இனி இடம்பெற வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. இதனால், விலங்குகளுக்கும் தீங்கு ஏற்படுவதாக கூறிய HC, ஆய்வுகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தியது.
News February 7, 2026
மனசு உடைந்துபோக இதுவே காரணம்: கயாது

வாழ்க்கையில் தான் மாற்றிக்கொள்ள வேண்டிய முக்கியமான விஷயம் ஒன்று இருப்பதாக டிராகன் நாயகி கயாது லோஹர் கூறியுள்ளார். தன்னை மிகவும் உணர்ச்சிவசப்படக்கூடிய ஆள் எனக் குறிப்பிட்ட அவர், அதைத் தனது பிரச்னையாக நினைப்பதாகவும், உணர்ச்சிவசப்படுவதால் எளிதில் மனமுடைந்து விடுவதாகவும் தெரிவித்தார். ஆகையால், இந்த போக்கை மாற்றிக்கொண்டு இன்னும் உறுதி மிக்கவளாய் மாற ஆசைப்படுவதாக குறிப்பிட்டார்.
News February 7, 2026
திமுக ஆட்சியில் பாலியல் குற்றங்கள் அதிகரிப்பு: நயினார்

திமுக ஆட்சியில் வடமாநிலப் பெண்கள், வடமாநிலத் தொழிலாளர்கள் மீதான வன்முறை வரம்பின்றி செல்வதாக நயினார் சாடியுள்ளார். தனது X பதிவில், நெல்லையில் வடமாநிலப் பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட செய்தியை சுட்டிக்காட்டி, திமுக ஆட்சியில் பாலியல் குற்றங்கள் குறைந்தபாடில்லை என தெரிவித்துள்ளார். மேலும், TN பெண்களுக்கும், தமிழகம் வரும் பெண்களுக்கும் பாதுகாப்பில்லாத ஆட்சியை திமுக நடத்துவதாக கூறியுள்ளார்.


