News August 21, 2025
இதை செய்தால் வீட்டிற்குள் கொசு நுழையாது

மழைக்காலம் தொடங்கியுள்ள நிலையில், கொசுக்களும் படையெடுக்கத் தொடங்கியுள்ளன. இவற்றின் மூலம் டெங்கு, மலேரியா போன்ற நோய்கள் பரவுவதால் அவற்றை விரட்ட மக்கள் பல முயற்சிகளை கையாளுகின்றனர். கொசுவை விரட்ட, 5-10 பூண்டை நீரில் ஊறவைத்து அந்த நீரை வீடு முழுவதும் தெளித்தால், அந்த வாடைக்கு வீட்டிற்குள் கொசு வாராது எனக் கூறப்படுகிறது. வீட்டிற்குள் சூடம் கொளுத்துவதன் மூலமும் கொசு வரவிடாமல் தடுக்கலாம்.
Similar News
News January 17, 2026
ஜல்லிக்கட்டு திமுக குடும்ப விழாவா? ஆர்.பி.உதயகுமார்

உதயநிதி வருகைக்காக, நேற்று பாலமேடு ஜல்லிக்கட்டு 2 மணி நேரம் தாமதம் செய்யப்பட்டது சர்ச்சையாகியுள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள ஆர்.பி.உதயகுமார், ஜல்லிக்கட்டு விழாவை திமுகவின் குடும்ப விழாவாக மாற்றிவிட்டதாக விமர்சித்தார். எத்தனை நாள்களுக்குத்தான் மக்கள் பொறுத்திருப்பார்கள்; ஜல்லிக்கட்டு வாடிவாசலை திறக்க இளவரசர், மன்னர் வரும் வரை மக்கள் காத்திருக்க வேண்டுமா என காட்டமாக கேள்வி எழுப்பினார்.
News January 17, 2026
FLASH: தங்கம் விலை மேலும் குறைந்தது

சர்வதேச சந்தையில் தங்கம் விலை 1 அவுன்ஸ்(28g) $23(இந்திய மதிப்பில் ₹2,087) குறைந்து $4,596-க்கு விற்பனையாகிறது. நேற்று $25 குறைந்திருந்த நிலையில், இந்திய சந்தையில் சவரனுக்கு ₹480 குறைந்திருந்தது. இதனால், இன்றும்(ஜன.17) காலை 9 மணிக்கு இந்திய சந்தையில் தங்கம் விலை குறைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது
News January 17, 2026
காங்., நிர்வாகிகளுடன் டெல்லி தலைமை ஆலோசனை

ஆட்சியில் பங்கு கேட்டு திமுகவுக்கு நெருக்கடி கொடுக்கும் காங்., கட்சியினர், தவெக பக்கம் செல்ல விரும்புவதாக பேச்சு எழுந்தது. இந்நிலையில், கூட்டணி, தொகுதிப் பங்கீடு குறித்து ஆலோசனை நடத்த தமிழக காங்கிரஸ் தலைவர்களுடன் டெல்லி தலைமை இன்று பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டெல்லியில் நடைபெற உள்ள இக்கூட்டத்தில் ராகுல், கார்கே பங்கேற்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.


