News April 8, 2024
திருவள்ளூர்: சோதனை சாவடியில் தீவிர சோதனை

திருவள்ளூர் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட கும்மிடிப்பூண்டியில் தேர்தல் பாதுகாப்பு பணிக்காக மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் தற்போது முகாமிட்டுள்ளனர். இந்த நிலையில் நேற்று கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் சோதனைச்சாவடியில் கும்மிடிப்பூண்டி டிஎஸ்பி, மத்திய பாதுகாப்பு படையினர் இணைந்து வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். வெளிமாநில வாகனங்கள் தீவிர சோதனைக்குப் பின் அனுமதிக்கப்பட்டன.
Similar News
News November 18, 2025
SIR. படிவங்களை நிரப்ப உதவி மையங்கள்

திருவள்ளூர் மாவட்டத்திற்கு உட்பட்ட கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, திருத்தணி, திருவள்ளூர், பூந்தமல்லி, ஆவடி, மதுரவாயல், அம்பத்தூர், மாதவரம் மற்றும் திருவொற்றியூர் உள்ளிட்ட சட்டமன்ற தொகுதிகளில் அவரவர் வாக்குசாவடியில் SIR., படிவம் பூர்த்தி செய்வது தொடர்பான சந்தேகங்களை தீர்க்கும் முகாம் வரும் நவ. 19, 20 ஆகிய நாட்களில் மாலை 3 மணி முதல் 6 மணி வரை நடைபெறும் என்று மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தெரிவித்துள்ளார்.
News November 18, 2025
தேசிய வில்வித்தை போட்டிக்கு கும்மிடிப்பூண்டி மாணவி தேர்வு

தாம்பரத்தில் தனியார் கல்லூரியில் நடைபெற்ற தேசிய வில்வித்தை போட்டிக்கான வீரர்கள் தேர்வு போட்டியில் கும்மிடிப்பூண்டியை சேர்ந்த குயிக் ஸ்பேரோ வில்வித்தை பயிற்சி மையத்தை சேர்ந்த 9ஆம் வகுப்பு மாணவி தவ்ஷிகா தஸ்னீம்(14) பெண் பதக்கம் வென்றார். இதனைத் தொடர்ந்து இவர் டிசம்பர் மாதம் அருணாச்சல பிரதேசத்தில் நடைபெற உள்ள 21 வயதிற்கு உட்பட்ட இந்திய ஜூனியர் வில்வித்தை போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
News November 18, 2025
திருவள்ளூருக்கு பெருமை சேர்த்த பாலபுரம் ஊராட்சி

மத்திய அரசின் ஜல்சக்தி அமைச்சகத்தின் சார்பில் புது டெல்லியில் உள்ள விக்யான் பவனில் 6வது தேசிய நீர் மேலாண்மை விருதுகள் இன்று வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த பாலாபுரம் ஊராட்சிக்கு தேசிய அளவில் நீர் மேலாண்மையில் 3வது இடம் கிடைத்தது. இதற்கான விருதை மத்திய நீர்வளத்துறை அமைச்சர் சி.ஆர்.பாட்டில் திருவள்ளூர் ஆட்சியர் பிரதாப்பிடம் வழங்கினார்.


