News August 21, 2025
உங்களுடன் ஸ்டாலின் முகாம் இன்று எங்கெல்லாம் நடைபெறும்?

சென்னை மாநகராட்சியில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் இன்று (ஆகஸ்ட் 21) 9 வார்டுகளில் நடைபெறவுள்ளது. திருவொற்றியூர் (வார்டு-10, பூந்தோட்டம்), தண்டையார்பேட்டை (வார்டு-48, மின்ட்), இராயபுரம் (வார்டு-58, சிடன்ஹாம்ஸ் சாலை), அம்பத்தூர் (வார்டு-80, சூரப்பேட்டை), தேனாம்பேட்டை (வார்டு-117, மெலனி சாலை), கோடம்பாக்கம் (வார்டு-141, சி.ஐ.டி. நகர்) ஆகிய இடங்களில் நடைபெற உள்ளது. ஷேர் பண்ணுங்க!
Similar News
News August 21, 2025
சென்னை: ரூ.5 லட்சம் வரை காப்பீடு!

சென்னை மக்களே, முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் ஒரு குடும்பம் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். இத்திட்டத்தை பெற கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மருத்துவ அடையாள அட்டை வழங்கும் மையத்தில் பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம். அல்லது <
News August 21, 2025
சென்னை மாநகராட்சி எச்சரிக்கை

சென்னை மாநகராட்சி பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. அதன்படி, பொதுமக்களுக்கு அச்சமூட்டும் வகையான நாய்களை வீட்டில் வளர்க்ககூடாது. நோய் தடுப்பூசி செலுத்திய நாய்களை மட்டுமே வெளியிடங்களுக்கு அழைத்து செல்ல வேண்டும். கழுத்துப்பட்டை, முகமூடி அணியாமல் நாய்களை வெளியே கொண்டு வரக்கூடாது என தெரிவித்துள்ளது. தெருநாய் குறித்த புகார்களை https://chennaicorporation.gov.in/gcc/ என்ற இணையதளத்தில் தெரிவிக்கலாம்.
News August 20, 2025
சென்னையில் நாளை கரண்ட் கட்!

சென்னையில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஆகஸ்ட் 21) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பள்ளிக்கரணை மீனாட்சி நகர், பெரும்பாக்கம் கைலாஷ் நகர், ஆண்டனி நகர், புளியந்தோப்பு பவுடர் மில்ஸ் ரோடு, வீராசெட்டி தெரு, திருவான்மியூர் சாஸ்திரி நகர், அடையாறு இந்திரா நகர் 1 முதல் 3வது பிரதான சாலை, கஸ்தூரிபாய் நகர் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் 2 மணி வரை மின்னிறுத்தம் செய்யப்படும். ஷேர்!