News August 21, 2025
பண மோசடி குறித்து நெல்லை காவல் துறை எச்சரிக்கை

வங்கியில் இருந்து பேசுவதாகக் கூறி, பிக்சட் டெபாசிட் மற்றும் கடன்கள் தொடர்பான OTP விவரங்களைக் கேட்கும் மோசடி அழைப்புகள் அதிகரித்து வருவதாகத் தெரிவித்துள்ளார். அறிமுகமில்லாத எண்களில் இருந்து வரும் இத்தகைய அழைப்புகளுக்கு எந்த தகவலையும் அளிக்க வேண்டாம் என்றும், உடனடியாக அழைப்பை துண்டித்துவிட்டு, அருகில் உள்ள வங்கிக்கு நேரடியாக சென்று உறுதி செய்ய வேண்டும் என்றும் நெல்லை SP சிலம்பரசன் எச்சரித்துள்ளார்.
Similar News
News November 12, 2025
நெல்லையில் ரூ.21,000 சம்பளத்தில் வேலை – APPLY!

மகளிர் அதிகார மையத்தில் பாலினர் வல்லுநர் பணிக்கு தகுதி உள்ள நபர் தேர்வு செய்யப்பட உள்ளார். சமூகப் பணி சமூகவியல் துறையில் இளங்கலை பட்டம் 3 வருட அரசு தனியார் தொண்டு நிறுவனங்களில் மகளிர் முன்னேற்றம் தொடர்பாக பணிபுரிந்து அனுபவம் அதிகபட்ச வயது 40. சம்பளம் 21,000 ஆகும் விண்ணப்பத்தை tirunelveli.nic.in இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து சமூக நல அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.
News November 12, 2025
நெல்லையில் பராமரிப்பு பணி காரணமாக ரயில்வே கேட் மூடல்

நெல்லை அருகே கைலாசபுரம் – கீழக்கோட்டை வழித்தட ரயில்வே கேட் தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக இன்று (நவ.12) காலை 9 மணி முதல் மாலை 5.30 மணி வரை மூடப்படுகிறது. இந்த கேட் வழியாக செல்லும் வாகனங்களை மாற்று பாதையில் இயக்க போலீசாருக்கு அறிவுறுத்தபட்டுள்ளது. இந்த தகவலை தெற்கு ரயில்வே நெல்லை சீனியர் செக்சன் இன்ஜினியர் தெரிவித்துள்ளார்.
News November 12, 2025
நெல்லை: வாக்காளர் பெயர் சேர்க்க முக்கிய அறிவிப்பு!

நெல்லை மக்களே, வாக்காளர் படிவத் திருத்தங்களுக்காக வீடு வீடாக SIR படிவம் உங்க பகுதில வழங்கும் போது நீங்க வீட்ல இல்லையா? உங்க ஓட்டு பறிபோயிடும்ன்னு கவலையா? அதற்கு ஒரு வழி இருக்கு. இங்கு <


