News August 21, 2025
திருப்பத்தூர்: உங்களுடன் ஸ்டாலின் முகாம்

முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிமுகம் செய்துள்ள ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர், ஆம்பூர், ஜோலார்பேட்டை, நாட்றம்பள்ளி, துத்திப்பட்டு, ஆகிய இடங்களில் இன்று (ஆகஸ்ட்-21) நடக்க இருக்கிறது. இந்த முகாமில், பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களின் குறைகளை மனுவாக வழங்கலாம். மகளிர் உதவித்தொகைக்கு இங்கேய விண்ணப்பிக்கலாம். உங்கள் நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க
Similar News
News August 21, 2025
Breaking: திருப்பத்தூரில் பெண் சிசுக் கொலை, மருத்துவர் கைது

பணத்திற்காக பெண் சிசுக்களை அழித்த வழக்கில் திருப்பத்தூர் மருத்துவர் சுகுமார்(60) கைது செய்யப்பட்டார். சில நாட்களுக்கு முன், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இருந்து வந்த 8 கர்ப்பிணிகள், கருவில் உள்ள குழந்தையின் பாலினத்தை அறிய திருப்பத்தூர் வந்திருந்தனர். இதுதொடர்பாக, 5 புரோக்கர்கள் ஏற்கனவே கைது செய்யப்பட்ட நிலையில், தலைமறைவாக இருந்த மருத்துவர் சுகுமாரை கந்திலி போலீசார் கைது செய்துள்ளனர்.
News August 21, 2025
திருப்பத்தூரில் வேலைவாய்ப்பு முகாம்

திருப்பத்தூர் மாவட்டத்தில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் சார்பாக சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை (22-08-2025) மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் காலை 10 மணி முதல் 1 மணி வரை நடைபெறவுள்ளது. மேலும் 8-12 ஆம் வகுப்பு தேர்ச்சி, டிப்ளமோ, பொறியியல் படித்த மாணவர்கள் பங்குபெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு 04179-222033 தொடர்பு கொள்ளலாம் .
News August 21, 2025
திருப்பத்தூர் மாவட்டத்தில் 507 பேர் மதுபான வழக்கில் கைது

வடக்கு மண்டல காவல்துறை தலைவர் அஸ்ரா கார்க் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், கடந்த ஓராண்டில் திருப்பத்தூர் மாவட்டத்தில் 358 நபர்களிடமிருந்து பத்திரம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், சட்டவிரோத மதுபான விற்பனை தொடர்பாக 507 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களது 449 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன என்றும் கூறினார்.