News August 21, 2025
பள்ளி அருகே மயங்கி விழுந்த முதியவர் உயிரிழப்பு

குன்றத்தூர், சேக்கிழார் நகரைச் சேர்ந்த 76 வயதான நடராஜன், நேற்று தனது பேரப்பிள்ளைகளை அரசுப் பள்ளியில் விட்டுவிட்டு பேருந்து நிலையம் நோக்கிச் சென்றபோது மயங்கி விழுந்தார். சம்பவ இடத்திலேயே உயிரிழந்த அவரது உடலை, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக போலீசார் அனுப்பி வைத்தனர். இது குறித்து குன்றத்தூர் போலீஸார் மேலும் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News February 19, 2026
செங்கல்பட்டில் பிணையமின்றி ரூ.40 லட்சம் கடனுதவி!

செங்கல்பட்டு மாவட்ட மக்களே சொந்தமாக தொழில் தொடங்க ஆசையா? கடன் வாங்க சொத்து ஏதும் இல்லையா..? கவலை வேண்டாம். அரசு சார்பாக உங்களுக்கு ரூ.40 லட்சம் வரை பிணையமின்றி கடன் வழங்கப்படுகிறது. இந்த TNCGS திட்டத்தில் இணைய, உங்கள் மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு தொழில் கூட்டுறவு வங்கி ( TAICO) , TAMCO, மாவட்ட தொழில் மையங்களில் விண்ணப்பிக்கலாம். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க. யாருக்காவது பயன் தரும்.
News February 19, 2026
அறிவித்தார் செங்கல்பட்டு கலெக்டர்

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடர், பழங்குடியினர் இளைஞருக்கு தாட்கோ மூலம் இலவச அழகு கலை பயிற்சி வழங்கப்படுகிறது. 12ஆம் வகுப்பு முடித்த 18-35 வயது வரை உள்ள இருபாலரும் இதில் பங்கேற்கலாம். 90 நாட்கள் பயிற்சி முடித்தவுடன் ரூ.18,000- 25,000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும். விருப்பம் உள்ளவர்கள் இங்கே <
News February 19, 2026
செங்கல்பட்டு: தீ பற்றி எரிந்த 10 கார்கள்!

மாமல்லபுரம் காவலர் குடியிருப்பு வளாகத்தில் குற்ற வழக்குகளிலும், சாலை விபத்துகளிலும் பறிமுதல் செய்யப்பட்ட 10 கார், ஆட்டோ, மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட வாகனங்களில் திடீரென தீ பற்றி எரிந்தது. தகவல் அறிந்த மாமல்லபுரம் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் கொழுந்து விட்டு எரிந்த தீயை தண்ணீரை பீய்ச்சி அடித்து ஒரு மணி நேரம் போராடி அணைத்தனர்.


