News April 8, 2024
விக்கிரவாண்டி தொகுதி காலி என அறிவிப்பு

விக்கிரவாண்டி திமுக எம்எல்ஏ புகழேந்தி உடல்நலக் குறைவால் நேற்று முன்தினம் காலமானார். இதையடுத்து, இன்று அத்தொகுதி காலியானதாக சட்டப்பேரவை செயலகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனால், அங்கு இடைத்தேர்தல் ஏற்பாடுகள் உடனடியாகத் தொடங்கும் எனத் தெரிகிறது. அத்துடன், நாடு முழுவதும் 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடக்க உள்ளதால், அதில் ஒரு நாள் தமிழகத்தில் இடைத்தேர்தல் நடத்தப்படும் எனக் கூறப்படுகிறது.
Similar News
News March 23, 2026
7 வாரத்தில் தங்கம் விலை சவரனுக்கு ₹30,800 குறைந்தது

தங்கம் வாங்க நினைத்தோருக்கு இம்மாதம் ஜாக்பாட்டாக அமைந்துள்ளது. இஸ்ரேல் – ஈரான் போர் பதற்றத்திற்கு மத்தியிலும் தங்கம் விலை மளமளவென குறைந்து வருகிறது. சர்வதேச சந்தையில் காலை நேர வர்த்தகத்துடன் ஒப்பிடுகையில் தற்போது 1 அவுன்ஸ் $289 குறைந்து $4,195 ஆக உள்ளது. கடந்த ஜன.29-ம் தேதி 1 சவரன் ₹1,34,400-க்கு விற்பனையான நிலையில், தற்போது ₹30,800 சரிந்து ₹1,03,600 ஆக உள்ளது. இது மேலும் குறைய வாய்ப்புள்ளதாம்.
News March 23, 2026
AK 47 துப்பாக்கிகளுக்கு லோகி கனெக்ஷன்.. போலீஸ் ஷாக்!

தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், சென்னை அசோக் நகரில் வாகன சோதனையில் 10-க்கும் மேற்பட்ட ‘AK 47’ துப்பாக்கிகளுடன் வேன் ஒன்று சிக்கியது. அதிர்ந்து போன போலீசார் டிரைவரிடம் நடத்திய விசாரணையில், இவை டம்மி துப்பாக்கிகள் என்பதையும், லோகேஷ் கனகராஜ் நடித்துவரும் ‘DC’ பட ஷூட்டிங்கிற்காக கொண்டு வரப்பட்டவை என்பதையும் போலீஸ் உறுதி செய்தனர். இதையடுத்து லைசன்ஸை சரிபார்த்தபின் அந்த வேனை விடுவித்தனர்.
News March 23, 2026
பொன்முடிக்கு Bye Bye சொன்னதா திமுக தலைமை?

சர்ச்சை கருத்துகள் பேசி சிக்கியதால் வரும் தேர்தலில் பொன்முடிக்கு சீட் கிடைப்பது கடினமே என அரசியல் விமர்சகர்கள் கூறிவந்தனர். இந்நிலையில், இதை உறுதிப்படுத்தும் வகையில், தற்போது நடக்கும் வேட்பாளர் நேர்காணலில் பொன்முடி பங்கேற்கவில்லை என ஒரு தகவல் கசிந்துள்ளது. இவருக்கு பதிலாக இவரது மகன் கௌதம சிகாமணிக்கு திருக்கோவிலூர் தொகுதியில் போட்டியிட திமுக தலைமை வாய்ப்பு வழங்கலாம் எனவும் கூறப்படுகிறது


