News August 20, 2025

காஞ்சிபுரம் மாவட்ட இரவு ரோந்து செல்லும் போலீசார் விவரம்!

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று (ஆகஸ்ட் 20) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

Similar News

News August 21, 2025

காஞ்சிபுரம் வரும் இபிஎஸ்

image

காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக செயலாளர் வி.சோமசுந்தரம் நேற்று (ஆக.20) செய்தி குறிப்பை நேற்று வெளியிட்டார். அதில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இன்று (ஆக.21) காஞ்சிபுரம் வருகை தந்து விவசாயிகள், நெசவாளர்கள் சந்தித்து பேசுகிறார். இதனையடுத்து மாலை குமரக்கோட்டம் முருகன் கோவில் அருகில் பொதுகூட்டத்தில் பேசுகிறார். மேலும் வாலாஜாபாத் பேருந்து நிலையம் அருகில் பேசுகிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

News August 21, 2025

காஞ்சிபுரம்: ரூ.5 லட்சம் வரை காப்பீடு!

image

காஞ்சிபுரம் மக்களே, முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் ஒரு குடும்பம் ஆண்டுக்கு ரூ.5லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். இத்திட்டத்தை பெற கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மருத்துவ அடையாள அட்டை வழங்கும் மையத்தில் பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம். அல்லது இன்று நடக்கும் <>’உங்களுடன் ஸ்டாலின்’ <<>>முகாமில் கலந்து கொண்டு விண்ணப்பிக்கலாம். விவரங்களுக்கு 1800 425 3993 அழைக்கவும். (SHARE)

News August 21, 2025

காஞ்சிபுரத்தில் 1000-ம் பேருக்கு வேலை ரெடி!

image

காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு & தொழில்நெறி வழிகாட்டும் மையம் & மாவட்ட நிர்வாகம் சார்பில் காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் ஆகஸ்ட் 22ஆம் தேதி நடைபெற உள்ளது. இம்முகாமில் தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு 1000-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களை நிரப்ப உள்ளது. வேலை தேடும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க.

error: Content is protected !!