News August 20, 2025
Windows OS யூஸ் பண்றீங்களா? உடனே இதை செய்யுங்கள்!

எளிதாக ஹேக் செய்யப்பட வாய்ப்பு உள்ளதால் மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் 10, விண்டோஸ் 11 பயன்படுத்துபவர்கள் எச்சரிக்கையாக இருக்க மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. Microsoft Office, Microsoft Dynamics, Browser, Device, Developer Tools, Open Source Software ஆகியவை ஆபத்து பட்டியலில் உள்ளன. இச்செயலிகளை உடனே அப்டேட் செய்யவும், விண்டோஸை அப்டேட் செய்து சிஸ்டமை ரீபூட் செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Similar News
News August 21, 2025
அல்லு அர்ஜுன் – அட்லி படத்தில் இணைந்த பிரபல நடிகர்?

ஜவான் வெற்றிக்கு பின் அல்லு அர்ஜுன் நடிக்கும் பெயரிடப்படாத படத்தை அட்லி இயக்குகிறார். பிரமாண்டமான பொருட்செலவில் தயாராகி வரும், இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்து வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கு முன் ஹிந்தியில் அட்லி இயக்கத்தில் வெளியான ஜவான் படத்திலும் விஜய்சேதுபதி நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
News August 21, 2025
லிங்க வடிவில் காட்சி தரும் விநாயகர்!

திண்டிவனம், தீவனூர் பிள்ளையார் கோயிலில் விநாயகர் லிங்க வடிவில் காட்சி தருகிறார். பல நூறு ஆண்டுகளுக்கு முன், ஆடுமேய்க்கும் சிறுவர்கள் நெல் குத்த கல் தேடிய போது, யானைத்தலை வடிவில் ஒரு கல் கிடைத்தது. அது விநாயகர் போல் தெரிய, பிரதிஷ்டை செய்து வழிபட தொடங்கினர். பால் அபிஷேகம் செய்யும் போது லிங்கத்தில் படிந்திருக்கும் விநாயக வடிவைத் தரிசிக்கலாம். இக்கோயில் திருமண தடை நீக்கும் என நம்பப்படுகிறது.
News August 21, 2025
38 மாவட்டங்களிலும்.. அரசு புதிய அறிவிப்பு

வெளிமாநில தொழிலாளர்களை கணக்கெடுக்கும் பணிக்கு TN அரசு டெண்டர் கோரியுள்ளது. 38 மாவட்டங்களில் சுமார் 35 லட்சம் வெளிமாநிலத்தவர்கள் பணியாற்றி வருவதாக தகவல் கூறப்படுகிறது. இந்நிலையில், *அவர்கள் தமிழகம் வருவதற்கான காரணம், *எங்கு உள்ளனர் *வாழ்க்கை நிலை *சுகாதார நிலை *என்ன பணி செய்கின்றனர் என்பதை கணக்கெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. அரசின் இந்த முடிவுக்கு பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். உங்கள் கருத்து?