News August 20, 2025

ராமநாதபுர மாவட்டத்தில் இரவு ரோந்து செல்லும் காவல்துறை

image

இன்று (ஆகஸ்ட் 20) இரவு 11.00 மணி முதல் நாளை காலை 6.00 மணி வரை காவல் அதிகாரிகள் ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை மற்றும் முதுகுளத்தூர் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். அதற்கான அட்டவணை வெளியிடப் பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கவும் என காவல் துறை தனது X வலைத்தள பக்கத்தில் அறிவித்துள்ளது.

Similar News

News August 21, 2025

இராமநாதபுரம்: ரயில்களின் வருகையை இனி எளிதில் காணலாம்

image

இராமநாதபுரம் மக்களே; இனி நீங்கள் ராமநாதபுரம் ரயில்களின் வருகை குறித்த விவரங்களை எளிதில் காண முடியும். இந்த பக்கத்தில் <>கிளிக்<<>> செய்து ரயில்களின் பெயர்கள் மற்றும் எண்கள், புறப்படும் இடம் மற்றும் நேரம், சென்றடையும் இடம், வாரத்தில் எந்தெந்த நாட்களில் ரயில்களின் உள்ளது என அனைத்தும் இடம் பெற்றுள்ளது. *பிறரும் பயன்பெற ஷேர் செய்து உதவுங்கள்.

News August 21, 2025

ராமநாதபுரம்: தாசில்தார்கள் பணியிட மாற்றம்

image

✅ ராமநாதபுரம் தாசில்தார் ரவி, ஆய மேற்பார்வை அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
✅ தேர்தல் தாசில்தார் காளீஸ்வரன், ராமநாதபுரம் தாசில்தாராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
✅ கீழக்கரை தாசில்தார் ஜமால் முஹமது, கோட்ட ஆய அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
✅ ராமநாதபுரம் சமூகப் பாதுகாப்புத் திட்ட தாசில்தார் செல்லப்பா, கீழக்கரை தாசில்தாராக மாற்றப்பட்டுள்ளார் என இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

News August 20, 2025

ராம்நாடு: மீனவர்களுக்கு நீதிமன்றக் காவல் நீட்டிப்பு

image

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 7 மீனவர்களை ஜூலை.13 அன்று இலங்கை கடற்படை கைது செய்தனர். இந்த வழக்கு 4-வது முறையாக இன்று ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அதில் வழக்கை விசாரித்த நீதிபதி 7 மீனவர்களில் படகு ஓட்டுனர் யார் என்பது விசாரணையில் தெரியவராதால் மீனவர்கள் 7 பேருக்கும் செப்.3 வரை நீதிமன்றக் காவல் நீட்டித்து உத்தரவிட்டார்.

error: Content is protected !!