News April 8, 2024

விக்கிரவாண்டி தொகுதி காலியானதாக அறிவிப்பு

image

விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி எம்எல்ஏ புகழேந்தி இரண்டு நாட்களுக்கு முன் உடல்நலம் பாதிக்கப்பட்டு காலமானார். இந்த நிலையில் விக்கிரவாண்டி தொகுதி காலியானதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அந்தத் தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் நடைபெறலாம், அதற்கான அறிவிப்பும் சில நாள்களில் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Similar News

News March 12, 2026

விழுப்புரத்தில் ரூ.5,000 வேண்டுமா..?

image

விழுப்புரம் மாவட்ட மக்களே.., உங்கள் வீட்டு இல்லத்தரசிகள் சுயமாக தொழில் தொடங்க உதவும் நோக்கத்தில், அரசு சார்பாக ‘கிரைண்டர் மானிய திட்டம்’ உள்ளது. இதன் மூலம், பெண்களுக்கு ரூ.5,000 மானியமாக வழங்கப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் உடனே உரிய ஆவணங்களுடன் மாவட்ட சமூக நல அலுவலகத்தை அணுகவும். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க. யாருக்காவது உதவியாக இருக்கும்.

News March 12, 2026

எம்.எல்.ஏ செஞ்சி மஸ்தான் வழங்கினார்!

image

விழுப்புரம்: செஞ்சி ஊராட்சி ஒன்றியம், ஆலம்பூண்டி கிராமத்தில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு ஆலம்பூண்டியில் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் அரிசி வழங்கும் திட்டம் நடைபெற்றது. இதை செஞ்சி சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ் மஸ்தான் வழங்கினார். உடன் செஞ்சி ஒன்றிய பெருந்தலைவரும் ஒன்றிய செயலாளருமான ஆர்.விஜயகுமார், மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் முத்தம்மாள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

News March 12, 2026

விழுப்புரம்: ரயில் மோதி கொடூர பலி!

image

திருவென்ணெய்நல்லூர், ஆலங்குப்பம் ரயில் நிலையம் அருகே உள்ள தண்டவாளத்தை நேற்று(மார்ச் 11) இரவு 9 மணிக்கு 60 வயது மதிக்கத்தக்க முதியவர் கடக்க முயன்றார். அப்போது, ராமேஸ்வரம் நோக்கி சென்ற சேது எக்ஸ்பிரஸ் ரயில் அவர் மீது மோதியது. இதில், படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த ரயில்வே இருப்பு போலீசார், விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

error: Content is protected !!