News August 20, 2025
கில் வரவால் சாம்சனுக்கு பின்னடைவு?

சுப்மன் கில், ஜெய்ஸ்வால் இல்லாத போது மட்டுமே சாம்சனுக்கு ஓபனிங் இறங்க வாய்ப்பு அளிக்கப்பட்டதாக தேர்வுக்குழு தலைவர் அகார்கர் கூறியது சாம்சனுக்கு பின்னடைவாக கருதப்படுகிறது. 2025 ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணியில் கில் இடம்பெற்றிருப்பதால், சாம்சன் உட்கார வைக்கப்படவே வாய்ப்புகள் அதிகம் என கூறப்படுகிறது. இதனால் அவரது டி20 கரியர் கேள்விக்குறியாகியுள்ளது.
Similar News
News January 16, 2026
ஒன்றுபட்ட இந்து சக்தி வென்று தீரும்: எச்.ராஜா

பாஜகவின் கடும் போராட்டத்திற்கு பிறகு, திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தலவிருட்சமான கல்லத்தி மரத்தில் பிறை கொடியை போலீசார் அகற்றியுள்ளனர். இந்நிலையில், இது பாஜக நடத்திய போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி. ‘ஒன்றுபட்ட இந்து சக்தி வென்று தீரும்’ என்பதற்கு இதுவே எடுத்துக்காட்டு எனக்கூறிய எச்.ராஜா,, பாஜகவுடன் இணைந்து போராட்டம் நடத்திய தாய்மார்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.
News January 16, 2026
முடிவுக்கு வருகிறதா திமுக – காங்., பஞ்சாயத்து?

தமிழக தலைவர்களுக்கு டெல்லி <<18869582>>காங்., தலைமை <<>>அவசரமாக அழைப்பு விடுத்தது பேசுபொருளாக மாறியிருக்கிறது. குறிப்பாக, மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகைக்கு எதிராக சொந்த கட்சிகாரர்களே திரும்பி இருக்கிறார்; மற்றொருபுறம் விஜய் பக்கம் செல்ல வேண்டும் என்ற குரலும் ஓங்கி ஒலிக்க தொடங்கி இருக்கிறது. இது நாளுக்கு நாள் தீவிரமடைவதால்தான், பஞ்சாயத்தை விரைவில் முடிவுக்கு கொண்டுவர டெல்லி தலைமை அவசரமாக அழைத்துள்ளதாம்.
News January 16, 2026
விஜய் உடன் இணைந்த அடுத்த தலைவர்.. இபிஎஸ் அதிர்ச்சி

அதிமுக மூத்த தலைவர்களில் ஒருவரும், வேலூர் மாவட்ட Ex மா.செ.,வுமான வாசு தவெகவில் இணைந்துள்ளார். 2006 – 2010 வரை வேலூர்(கி) மா.செ.,-வாக இருந்த இவர், 2009 லோக்சபா தேர்தலில் வேலூரில் அதிமுக சார்பில் போட்டியிட்டார். Ex அமைச்சர் KC வீரமணியின் நம்பிக்கை முகமாக இருந்த இவர், திடீரென செங்கோட்டையனுக்கு ஆதரவாக தவெகவில் இணைந்துள்ளது EPS தரப்பை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளதாம்.


