News August 20, 2025
BREAKING: அஜித் குமார் மரணம்.. அதிர்ச்சி தகவல்

காவலாளி அஜித்குமார் காவல் மரண வழக்கில் CBI குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. இதில், 103 சாட்சிகளின் வாக்குமூலங்கள், 102 ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேநேரம் அஜித்குமாருக்கு எதிராக திருட்டு புகார் வழக்கும் CBI வசம் உள்ள நிலையில், அதன் குற்றப்பத்திரிகை இன்னும் தாக்கல் செய்யப்படவில்லை. திடுக்கிடும் திருப்பமாக, இந்த வழக்கில் நிகிதா மீதும் FIR பதிவு செய்து விசாரிக்க கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
Similar News
News January 24, 2026
₹18,000 சம்பளம்.. 22,000 வேலைவாய்ப்பு!

இந்திய ரயில்வேயில் காலியாகவுள்ள 22,000 குரூப் ‘டி’ பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. கல்வித்தகுதி: 10th/ ITI. வயது வரம்பு: 18 – 33. தேர்வு முறை: கணினி வழி, உடற்தகுதி தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, மருத்துவ சோதனை. சம்பளம்: ₹18,000 முதல். இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் பிப்.20 வரை விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும். SHARE IT.
News January 24, 2026
எந்த தகுதியும் இல்லாதவர் உதயநிதி: EPS

இளைஞரணி தலைவர், MLA, அமைச்சர், DCM என எந்த தகுதியும் இல்லாத உதயநிதியை CM ஸ்டாலின் ஆளாக்கிவிட்டார் என்று EPS விமர்சித்துள்ளார். அடுத்து எந்த காலத்திலும், எந்த பதவிக்கும் கருணாநிதி குடும்பம் வர முடியாது என்ற அவர், இந்த தேர்தல் தான் திமுகவுக்கு இறுதியான தேர்தல் என்றார். மேலும், தீயசக்தி திமுகவை வீழ்த்துவோம் எனவும் எம்ஜிஆர், அம்மா இருபெரும் தலைவர்கள் கண்ட கனவை நிறைவேற்றுவோம் என்றும் உறுதியளித்தார்.
News January 24, 2026
இஞ்சி டீ குடிப்பதால் இத்தனை பிரச்னைகளா?

இஞ்சி டீ-யில் மருத்துவ குணங்கள் இருந்தாலும், அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொள்ளும் போது சில பக்க விளைவுகள் ஏற்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இஞ்சியின் தினசரி பயன்பாடு 4 கிராமுக்கு மேல் சென்றால் வயிற்றுப்போக்கு, தூக்கமின்மை பிரச்னைகள் ஏற்படுகின்றன. மேலும், பித்த நீர் அதிகமாக சுரக்கும் என்பதால் பித்தப்பை கல் பிரச்னை உள்ளவர்கள் இஞ்சி டீயை தவிர்க்குமாறு டாக்டர்கள் அறிவுறுத்துகின்றனர். SHARE.


