News August 20, 2025
ராம்நாடு: மீனவர்களுக்கு நீதிமன்றக் காவல் நீட்டிப்பு

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 7 மீனவர்களை ஜூலை.13 அன்று இலங்கை கடற்படை கைது செய்தனர். இந்த வழக்கு 4-வது முறையாக இன்று ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அதில் வழக்கை விசாரித்த நீதிபதி 7 மீனவர்களில் படகு ஓட்டுனர் யார் என்பது விசாரணையில் தெரியவராதால் மீனவர்கள் 7 பேருக்கும் செப்.3 வரை நீதிமன்றக் காவல் நீட்டித்து உத்தரவிட்டார்.
Similar News
News February 24, 2026
FLASH ராம்நாடு: பெயரை குறிப்பிட விருப்பமில்லை: சசிகலா

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 78 வது பிறந்த நாளை முன்னிட்டு ராம்நாட்டில் உள்ள கமுதியில் அதிமுக முன்னாள் பொதுச் செயலாளர் சசிகலா தலைமையில் மாநாடு நடைபெற்று வருகிறது. அதில் சசிகலா பேசியதாவது: இப்போ இருக்கிற வரை முதல்வர் ஆக்கினேன். எடப்பாடி பழனிச்சாமி பெயரை கூட குறிப்பிட விருப்பமில்லை. நான் முதலமைச்சர் ஆக்கியவர் பொதுக்குழுவை கூட்டி என்னை கட்சியில் நீக்கினர் என தெரிவித்தார்.
News February 24, 2026
பள்ளி வேன்மீது விபத்து ஏற்படுத்திய லாரிக்கு 1,40,000 அபராதம்..

சத்திரக்குடி தனியார் பள்ளி வேன் மீது இன்று லாரி மோதி விபத்துக்குள்ளானதில் பள்ளி மாணவர்கள் 30கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர் விருதுநகரில் இருந்து அளவுக்கு அதிகமாக பாறாங்கல்களை ஏற்றி வந்ததால் நிலைதடுமாறி விபத்து ஏற்பட்டது மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் அஜாக்கிரதையாக லாரியை ஒட்டி சென்றதாக லாரி உரிமையாளர் மீது 1,40,000 ரூபாய் அபராதம் விதித்து ராமநாதபுரம் மோட்டார்வாகன ஆய்வாளர் தங்கராசு உத்தரவிட்டார்
News February 24, 2026
ராம்நாடு : இனி சான்றிதழ்கள் வாங்க வரிசை-ல நிக்காதீங்க…!

இராமநாதபுரம் மாவட்ட மக்கள், இனி பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களைப் பெற அரசு அலுவலகங்கள் அல்லது மருத்துவமனைகளுக்கு நேரில் சென்று அலைய வேண்டிய அவசியமில்லை. தமிழ்நாடு அரசின் 78452 52525 என்ற வாட்ஸ்ஆப் எண்ணிற்கு ‘Hi’ என்று குறுஞ்செய்தி அனுப்பி, அதில் ‘பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை’ என்பதைத் தேர்வு செய்தால், பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள் உடனே கிடைக்கும். இதனை SHARE பண்ணுங்க.


