News August 20, 2025
தனியாருக்கு தூய்மைப் பணிகள்: HC முக்கிய உத்தரவு

சென்னை மாநகராட்சியில் (GCC) தூய்மைப் பணிகளை தனியாருக்கு வழங்குவதற்கு எதிராக உழைப்போர் உரிமை இயக்கம் வழக்கு தொடர்ந்தது. இதை விசாரித்த HC, மண்டலம் 5, 6-ல் தூய்மைப் பணிகளை தனியாருக்கு வழங்குவது தொடர்பான GCC தீர்மானத்தை ரத்து செய்ய முடியாது என தெரிவித்துள்ளது. தூய்மைப் பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என்ற நிலை எழவில்லை என்றும் கோர்ட் கூறியுள்ளது. இதற்காக போராட்டமும் நடைபெற்றது.
Similar News
News January 20, 2026
SIR நடவடிக்கையால் யாருக்கும் பாதிப்பில்லை: முகமது ஷமி

கிரிக்கெட் வீரர் முகமது ஷமியின் SIR படிவத்தில் இருந்த குளறுபடி காரணமாக அவரை தேர்தல் அதிகாரிகள் நேரில் ஆஜராக அறிவுறுத்தியிருந்தனர். அதன்படி கொல்கத்தாவில் ECI அதிகாரிகளிடம் தேவையான ஆவணங்களை அவர் நேரில் சமர்பித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஷமி, SIR பணிகளுக்கு மக்கள் ஒத்துழைக்க வேண்டும் எனவும், இது யாருக்கும் பாதிப்பை ஏற்படுத்தாது என்றும் தெரிவித்துள்ளார்.
News January 20, 2026
‘தேர்தல் அறிக்கை’ தவெக மாஸ்டர் பிளான்

அனைத்து தரப்பினரின் கோரிக்கைகளை உள்ளடக்கியதாக தவெகவின் தேர்தல் அறிக்கை இருக்கும் என அருண்ராஜ் தெரிவித்துள்ளார். தமிழகத்தை மண்டல வாரியாக பிரித்து தவெகவின் குழு மக்களை சந்திக்கும் என்றும் விவசாயிகள், மீனவ சங்கங்களின் கோரிக்கைகளையும் கேட்டறியும் எனவும் அவர் கூறினார். மேலும் சமூகநீதி, விளிம்பு நிலை மக்கள் முன்னேற்றம், வளர்ச்சி சார்ந்த திட்டங்கள் தேர்தல் அறிக்கையில் இடம்பெறும் என்றும் அவர் பேசினார்.
News January 20, 2026
தமிழகத்தின் பக்கம் திரும்பிய பாஜக தேசிய தலைவர் நபின்

பாஜக தேசிய தலைவராக தேர்வாகியுள்ள நிதின் நபின் தனது முதல் உரையிலேயே திருப்பரங்குன்றம் விவகாரத்தை கையில் எடுத்துள்ளார். திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீபம் ஏற்றுவது திட்டமிட்டு தடுக்கப்பட்டதாகவும், எதிர்க்கட்சிகள் இந்துக்களின் பாரம்பரியத்துக்கு எதிராக செயல்படுவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், நீதிபதியை நீக்க எதிர்க்கட்சிகள் எடுத்த நடவடிக்கையையும் சுட்டிக்காட்டி விமர்சித்துள்ளார்.


