News April 8, 2024
₹4000000000.. தமிழ்நாட்டிலா?

தமிழகத்தில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனையில் ₹400 கோடி வரி ஏய்ப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அரசு ஒப்பந்ததாரர்களுக்கு சொந்தமான இடங்கள் உட்பட 40 இடங்களுக்கு மேல் சோதனை நடைபெற்றது. இதில், ₹5 கோடி ரொக்கம், ₹5 கோடி மதிப்பிலான தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வருமான வரித்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
Similar News
News March 22, 2026
தங்கம் விலை மேலும் குறைகிறது

ஈரான் – இஸ்ரேல் போர் பதற்றத்திற்கு மத்தியிலும் தங்கம் விலை சரசரவென சரிந்து வருகிறது. இம்மாதத்தில் தங்கம் சவரனுக்கு ₹17,240 குறைந்தது. பணவீக்கத்தைக் கட்டுக்குள் கொண்டுவர மத்திய வங்கிகள் வட்டி விகிதங்களை உயர்த்தியுள்ளன. இதனால், வலுவான முதலீடாக இருந்த தங்கத்தின் மீதான மோகம் குறைந்துள்ளது. வரும் நாள்களில் மேலும் குறைந்து பின்னர் விலை ஏற்றத்தை சந்திக்கும் என TD securities நிறுவனம் தெரிவித்துள்ளது.
News March 22, 2026
ஈரானுக்கு 48 மணி நேரம் கெடு.. டிரம்ப் எச்சரிக்கை

அமெரிக்கா நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக, ஹார்முஸ் நீரிணையை ஈரான் மூடியதால், பல்வேறு நாடுகளில் பெட்ரோல், டீசல், சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், 48 மணி நேரத்திற்குள் ஹார்முஸ் நீரிணையை திறக்காவிட்டால், ஈரானின் மின்சக்தி நிலையங்கள் மீது தாக்கல் நடத்தப்படும் என்று டிரம்ப் எச்சரித்துள்ளார். ஆனால், ஹார்முஸ் நீரிணையை திறக்க முடியாது என்பதில் ஈரான் உறுதியாக இருப்பதாக கூறப்படுகிறது.
News March 22, 2026
திமுக கூட்டணியில் இருந்து விலகல்? சற்றுநேரத்தில் முடிவு

திமுக கூட்டணியிலிருந்து <<19440166>>தவாக <<>>இன்று அதிகாரப்பூர்வமாக வெளியேறவுள்ளதாக கூறப்படுகிறது. கூடுதல் சீட், தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றினால் கூட்டணியில் தொடருவோம்; இல்லையென்றால் விலகுவது குறித்து முடிவு எடுப்போம் என வேல்முருகன் கூறியிருந்தார். அவரிடம் திருமா உள்ளிட்டோர் பேசியும், எந்த பயனும் இல்லையாம். இதையடுத்து தனித்து போட்டியா, வேறு கட்சியுடன் கூட்டணியா என்பது குறித்து இன்று அறிவிக்கப்படவுள்ளதாம்.


