News August 20, 2025
சேலம்: டிகிரி போதும்.. ரூ.64,000 சம்பளத்தில் வேலை!

சேலம் மக்களே, SBI வங்கியில் வாடிக்கையாளர் சேவை மற்றும் சேல்ஸ் பிரிவில் உள்ள, 5,180 ஜூனியர் அசோசியேட்ஸ் காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு ஏதேனும் ஒரு பாடத்தில் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளமாக ரூ.24,050 முதல் ரூ.64,480 வரை வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <
Similar News
News August 21, 2025
சேலம்: ஆர்ப்பாட்டம், பொதுக்கூட்டம் நடத்த கட்டுப்பாடு!

“சேலம் மாநகரில் அரசியல் கட்சிகள், சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம், ஊர்வலம், உண்ணாவிரதம், பொதுக்கூட்டம் போன்றவற்றை நடத்துவதற்கு சேலம் மாநகர போலீஸ் கமிஷனரிடம் அனுமதி பெற்ற பின்னரே நடத்த வேண்டும். குறைந்தபட்சம் 5 நாட்களுக்கு முன்பு விண்ணப்பிக்க வேண்டும். குறிப்பிட்ட கால அளவுக்கு பின்னர் பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படமாட்டாது”- மாநகர போலீஸ் கமிஷனர் அனில்குமார் கிரி தெரிவிப்பு.
News August 21, 2025
ஆக.22, 26-ல் சில ரயில்கள் இயக்கத்தில் மாற்றம்!

தண்டவாள புதுப்பித்தல் பணிகள் காரணமாக, ஆக.22, 26-ல் கண்ணூர்-கோவை எக்ஸ்பிரஸ் ரயில் பாலக்காடு வரை மட்டுமே இயக்கப்படும். பாலக்காடு முதல் கோவை வரை இயக்கப்படாது. கோவை- மதுரை எக்ஸ்பிரஸ் ரயில், பொள்ளாச்சியில் இருந்து புறப்படும். போத்தனூர்- மேட்டுப்பாளையம் ரயில் கோவையில் இருந்து புறப்படும் என்று சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.
News August 21, 2025
சேலம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம்!

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று (ஆகஸ்ட்.20) இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம் வெளியிடப்பட்டுள்ளது.