News April 8, 2024
இந்தியாவில் கார்கள் விற்பனை புதிய உச்சம்

இந்தியாவில் கார்கள் விற்பனை புதிய உச்சம் கண்டுள்ளது. கடந்த 2022-23 நிதியாண்டில் இந்தியாவில் 36,40,399 கார்கள் விற்பனையாகி இருந்தன. அதை விஞ்சும் வகையில், 2023-2024 நிதியாண்டில் 39,48,143 கார்கள் விற்பனையாகி உள்ளன. இது 8.45% அதிகமென்றும், இந்தியாவில் கார்கள் இந்தளவு அதிகமாக விற்பனையாகியிருப்பது இதுவே முதல்முறை என்றும் ஆட்டோ மொபைல் விற்பனையாளர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
Similar News
News March 6, 2026
திருவாரூர் இரவு ரோந்து பணி காவலர்கள் அறிவிப்பு

திருவாரூர் மாவட்டத்தில் இன்று (மார்ச்.5) இரவு 10 மணி முதல் (மார்ச்.6) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு, உங்கள் பகுதி அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!
News March 6, 2026
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (மார்ச் 6) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email – way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க
News March 6, 2026
‘US தாக்கினால் இந்தியாவை குறை சொல்ல முடியாது’

ஈரான் போர் கப்பல் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலுக்கு இந்தியாவை குற்றம்சாட்டுவது நியாயமற்றது என்று பாஜக தலைவர் அமித் மாளவியா விமர்சித்துள்ளார். அவரது X பதிவில், இச்சம்பவம் இந்திய கடற்கரையிலிருந்து சுமார் 250 nautical miles தூரத்தில், சர்வதேச கடலில் நடந்ததாக கூறப்படுகிறது. சர்வதேச கடல் சட்டப்படி அந்த பகுதியில் நடந்த செயல்களுக்கு இந்தியாவுக்கு பொறுப்பு இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.


