News August 20, 2025
BREAKING: மதுரையில் 1 மணி நேரத்தில் அகற்ற உத்தரவு

மதுரையில் அனுமதி பெறாமல் வைக்கப்பட்டிருக்கும் பிளக்ஸ், பேனர்களை ஒரு மணி நேரத்திற்குள் அகற்ற வேண்டும் என மதுரை காவல் ஆணையருக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. நாளை (ஆகஸ்ட்.21) தவெக மாநில மாநாடு நடைபெற உள்ள நிலையில் இந்த அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சினிமா பட வெளியீட்டின் போது வைக்கப்படும் பிரம்மாண்டமான பேனர்களால் விபத்துகள் ஏற்படுகின்றன என நீதிபதிகள் கருத்து.
Similar News
News February 3, 2026
மதுரை: தொழில் தொடங்க ரூ.3 லட்சம் கடன்

மதுரை மக்களே, மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு மத்திய அரசு “உத்யோகினி யோஜனா” திட்டத்தின் கீழ் ரூ.3 லட்சம் கடன் உதவி வழங்குகிறது. இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற <
News February 3, 2026
மதுரையில் 16 பவுன் நகை கொள்ளை

மதுரை கூடல்புதூர் ராம் முனிநகர் ரயில் தண்டவாளம் பகுதியில் உள்ள மூன்று வீடுகளில் உரிமையாளர்கள் குடும்பத்தினருடன் வெளியூர் சென்றிருந்தனர். இதனை கண்காணித்த மர்மநபர்கள் நேற்று முன்தினம் இரவு இரண்டு வீடுகளில் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். அதில் ஒரு வீட்டில் 8 பவுன், மற்றொரு வீட்டில் 8 1/2 பவுன் என மொத்தம் 16 1/2 பவுன் தங்க நகைகளை திருடி சென்றுள்ளனர். கொள்ளையர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
News February 3, 2026
மதுரை: வெவ்வேறு சம்பவங்களில் 2 பேர் உயிரிழப்பு

செல்லூர் பகுதியைச் சேர்ந்த மாரியப்பன்(47) பழைய இரும்பு வியாபாரம் செய்து வந்துள்ளார். இவர் வீட்டின் படிக்கட்டில் ஏறியபோது தவறி விழுந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கு உயிரிழந்தார். மற்றொரு சம்பவத்தில் ஜராவதநல்லூர் பகுதியைச் சேர்ந்த காரல்மார்க்ஸ் என்பவர் சம்பவத்தன்று வீட்டில் இறந்து கிடந்தார். இது குறித்து அவரது மகள் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


