News August 20, 2025
கொள்ளிடம் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு – எச்சரிக்கை

கிருஷ்ணராஜ சாகர் மற்றும் கபினி அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதன் விளைவாக, மேட்டூரிலிருந்து காவிரியாற்றில் உபரி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால், அரியலூர் மாவட்டம் கொள்ளிடம் ஆற்றில் நீர்வரத்து கணிசமாக உயர்ந்துள்ளது. பொதுமக்கள் யாரும் ஆற்றில் இறங்க வேண்டாம் என்றும், பாதுகாப்பாக இருக்குமாறும் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Similar News
News February 7, 2026
அரியலூர்: போனில் பணம் அனுப்புவோர் கவனத்திற்கு

தற்போது அனைவரும் UPI மூலமே பணத்தை அனுப்புகின்றனர். இந்த சூழலில், தவறுதலாக மாற்றி தெரியாத நபர்களுக்கு பணத்தை அனுப்பி விட்டால் கவலை வேண்டாம். உடனடியாகப் பணம் பெற்றவரைத் தொடர்பு கொள்ளவும். இல்லையெனில், Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) வாடிக்கையாளர் சேவை எண்களைத் தொடர்புகொண்டு புகார் தெரிவித்தால் உங்கள் பணத்தைத் திரும்பப் பெறலாம். SHARE பண்ணுங்க!
News February 7, 2026
அரியலூர்: கடைசி வாய்ப்பு – அரசு வேலை

தமிழ்நாடு சுகாதார துறையில், காலியாக உள்ள 999 செவிலியர் உதவியாளர் (தரம்-2) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: தமிழ்நாடு அரசு வேலை
2. பணியிடங்கள்: 999
3. வயது: 18 – 44
4. சம்பளம்: ரூ.15,700-ரூ.58,100
5. கல்வித்தகுதி: 10th & Nursing Assistants Course
6. கடைசி தேதி: 08.02.2026
7. விண்ணப்பிக்க: <
இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்து உதவுங்க!
News February 7, 2026
அரியலூர்: RC ரத்து – உங்க வண்டி இருக்கா CHECK IT!

மத்திய அரசு 17 கோடி பைக், கார் வாகனங்களின் RC ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளது. அதில் உங்களது பைக் / கார் இருக்கான்னு இப்போவே, CHECK பண்ணுங்க. அதற்கு<


