News August 20, 2025
நாமக்கல் மாவட்ட வானிலை நிலவரம்

நாமக்கல் மாவட்டத்தில் இன்று மழை பெய்ய வாய்ப்பு இல்லை. நாளை (வியாழக்கிழமை) 1 மி.மீட்டரும், நாளைமறுநாள் (வெள்ளிக்கிழமை) 4 மி.மீட்டரும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. வெப்பநிலையை பொறுத்தவரையில், அதிகபட்சமாக 89.6 டிகிரியாகவும், குறைந்தபட்சமாக 77 டிகிரியாகவும் இருக்கும் என நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Similar News
News August 21, 2025
நாமக்கல் ரயில் பயணிகள் கவனத்திற்கு!

நாமக்கலில் இருந்து வெள்ளிக்கிழமை 22/8/2025 காலை 6:15 மணிக்கு பெங்களூரூ, ஹூப்ளி, பெலகாவி, மிரஜ், கல்யாண், புனே, சூரத், வதோதரா, அகமதாபாத், அபூ ரோடு, ஜோத்பூர், பிகானீர், சூரத்கர், ஶ்ரீ கங்கா நகர் போன்ற பகுதிகளுக்கு செல்ல 22498 திருச்சி – ஶ்ரீ கங்கா நகர் ஹம்சஃபார் ரயில் ரயிலில் டிக்கெட்டுகள் உள்ளன. தேவைப்படுவோர் விரைவாக முன்பதிவு செய்து பயணிக்கலாம்.
News August 21, 2025
நாமக்கல்: 4 சக்கர இரவு ரோந்து போலீசார் விவரம்

நாமக்கல் மாவட்டம் நாமக்கல் மாவட்டத்திற்கு இரவு நேரங்களில் நான்கு சக்கர ரோந்து அதிகாரிகள் தினமும் நியமிக்கப்படுகிறார்கள் அதனை தொடர்ந்து இன்று நாமக்கல் – தங்கராஜ் (9498110895), வேலூர் – சுகுமாரன் ( 8754002021), ராசிபுரம் – கோவிந்தசாமி ( 9498209252), பள்ளிபாளையம் – பெருமாள் ( 9498169222), திம்மன்நாயக்கன்பட்டி – ஞானசேகரன் ( 9498169073), குமாரபாளையம் – செல்வராசு (9994497140) ஆகியோர் இன்று உள்ளனர்.
News August 20, 2025
நாமக்கலில் முட்டை விலை மாற்றம் இல்லை!

நாமக்கலில் இன்று (ஆகஸ்ட் 20) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில், முட்டை விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ.5 ஆக நிர்ணயம் செய்யப்பட்டு, அதே விலையில் நீடிப்பதாக அறிவிக்கப்பட்டது. மழை மற்றும் குளிர் காரணமாக முட்டை நுகர்வு அதிகரித்துள்ளபோதிலும், விலை உயர்த்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.