News April 8, 2024
பிரக்ஞானந்தா, குகேஷ், வைஷாலியின் ஆட்டங்கள் டிரா

கேண்டிடேட்ஸ் செஸ் தொடரின் 4ஆவது சுற்றுப் போட்டியில், பிரக்ஞானந்தா டிரா செய்துள்ளார். அமெரிக்க வீரர் ஹிகாரு நகமுராவுக்கு எதிரான இப்போட்டியானது, 24 நகர்த்தல்களிலேயே டிரா ஆனது. இதனைத் தொடர்ந்து, ஃபேபியானோ கருவானாவுக்கு எதிரான போட்டியில் குகேஷ், மகளிர் பிரிவில் வைஷாலி ஆகியோரது ஆட்டங்களும் டிராவில் முடிந்தது. இதனால் புள்ளிப் பட்டியலில் குகேஷ் 2ஆவது மற்றும் பிரக்ஞானந்தா 3ஆவது இடத்திலும் உள்ளனர்.
Similar News
News August 12, 2025
மொபைல் பேங்கிங் யூஸ் பண்றீங்களா.. நோட் திஸ்!

70% வங்கிகளின் Mobile banking App-களில் SSL(Secure Sockets Layer) சான்றிதழ் இல்லை என ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. SSL இல்லாத App-கள் எளிதில் ஹேக் செய்யப்படும். அதே போல Phishing, Spoofing போன்ற வழிகளிலிலும் தகவல்கள் திருடப்படுகின்றன. இதிலிருந்து தப்பிக்க,
◈அங்கீகரிக்கப்படாத வலைத்தளங்கள் தவிர்க்கவும்.
◈SSL சான்றிதழ் இல்லாத App-களை தவிர்க்கவும்.
◈பொது Wifi-ல் Mobile banking-ஐ பயன்படுத்த வேண்டாம்.
News August 12, 2025
‘கூலி’ ஸ்பெஷல் ஷோவுக்கு அரசு அனுமதி!

ரஜினியின் கூலி படத்தின் ஸ்பெஷல் ஷோவுக்கு TN அரசு அனுமதி வழங்கியுள்ளது. வரும் 14-ம் தேதி காலை 9 மணி முதல் நள்ளிரவு 2 மணிக்குள் 5 காட்சிகளை திரையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் சுமார் 7,500 ஸ்கிரீன்களில் திரையிடப்படவுள்ள கூலி படத்தின் புக்கிங் கடந்த 8-ம் தேதி தொடங்கிய நிலையில், பல இடங்களில் ஒரு டிக்கெட் ₹2,000-க்கு விற்கப்படுவதாகவும் சர்ச்சை எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
News August 12, 2025
உருவாகிறது புயல் சின்னம்.. மீனவர்களுக்கு எச்சரிக்கை

வடமேற்கு வங்கக் கடலில் நாளை காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதால், மீனவர்களுக்கு IMD எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்று முதல் ஆக., 15 வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த 48 மணி நேரத்தில் வலுப்பெறும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே 7 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.