News August 20, 2025

காதல்.. டீச்சரை பெட்ரோல் ஊற்றி எரித்த மாணவன்

image

மத்தியபிரதேசத்தில் தான் ஒருதலை காதலை வளர்த்துவந்த 26 வயது ஆசிரியையை மீது 18 வயது மாணவன் பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஒருநாள் தன்னை பார்த்து கமெண்ட் அடித்ததால் மாணவர் மீது ஆசிரியை போலீசில் புகாரளித்துள்ளார். இதனால் கடுப்பான அம்மாணவன் டீச்சரை பெட்ரோல் ஊற்றி கொளுத்தியுள்ளார். ஆசிரியை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், மாணவனை போலீசார் கைது செய்துள்ளனர்.

Similar News

News January 26, 2026

செங்கல்பட்டு இன்று இரவு பணி செய்யும் காவலர் விவரம்

image

செங்கல்பட்டு நேற்று (ஜனவரி-25) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News January 26, 2026

வலுவாக இருக்கும் பொருளாதார வளர்ச்சி: முர்மு

image

குடியரசு தினத்தையொட்டி நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி முர்மு ஆற்றிய உரையில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி சிறப்பாக உள்ளதாகவும், இளைஞர்கள் முன்னேற்றம் அடைந்துள்ளதாகவும் பெருமிதம் தெரிவித்தார். நாட்டின் வளர்ச்சிக்கு பெண்கள் முக்கிய பங்காற்றி வருகின்றனர் என்றும், மகளிர் உலகக்கோப்பை, பார்வையற்றோர் மகளிர் உலகக்கோப்பையை வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார்.

News January 26, 2026

சூழ்ச்சியில் விசிகவினர் சிக்கக்கூடாது: ஆதவ் அர்ஜுனா

image

விசிகவில் இருபது பேர் மட்டும் இருப்பதாக இன்று ஆதவ் அர்ஜுனா பேசியது சர்ச்சையானது. இந்நிலையில், நான் பேசிய சில வார்த்தைகள் தவறாகப் புரிந்துக் கொள்ளப்பட்டதாக ஆதவ் விளக்கமளித்துள்ளார். திமுகவின் ஆட்களாகவே மாறிவிட்ட 20 பேர் விசிகவுக்குள் இருக்கிறார்கள் என்பதைதான் சுட்டிக்காட்டினேன். ஆனால், தனது பேச்சை தவறாக திரிக்கும் திமுகவினரின் சூழ்ச்சியில் விசிக தோழர்கள் சிக்கிக் கொள்ளக்கூடாது எனக் கூறினார்.

error: Content is protected !!