News August 20, 2025

SRK-வை ரீபிளேஸ் செய்த SK?

image

மதராஸி படத்திற்கு சிவகார்த்திகேயன் கதாநாயகனாக தேர்வு செய்யப்பட்டது எப்படி என்பது குறித்து இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் பகிர்ந்துள்ளார். 7 வருடங்களுக்கு முன்பு படத்தின் ஒன்லைனை ஷாருக் கானுக்கு சொன்னதாகவும், அதை அவர் பிடித்திருக்கிறது என்றதாகவும் தெரிவித்தார். ஆனால், அதன்பின் SRK-விடம் இருந்து அழைப்பு வராததால், கதாபாத்திரத்தை மெருகேற்றி SK-வை தேர்வு செய்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Similar News

News January 14, 2026

திண்டுக்கல் திமுக பிரமுகர் வீட்டில் கஞ்சா? பாஜக விளாசல்!

image

திண்டுக்கல் தோமையார்புரம் பகுதியில் திமுக பிரமுகர் ஒருவர் வீட்டில் கஞ்சா செடி வளர்ப்பதாகப் புகார் எழுந்தது. சம்பவ இடத்திற்குச் சென்ற தாலுகா போலீசார், கஞ்சா செடி இருப்பதை உறுதி செய்தனர். ஆனால், அந்த இடம் புறம்போக்கு நிலத்தில் இருப்பதாகக் கூறி திமுக பிரமுகர் மீது நடவடிக்கை எடுக்கப் போலீசார் தயங்குவதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாஜக EX மாவட்டத் தலைவர் ஜி.தனபாலன் கோரிக்கை!

News January 14, 2026

இந்த மாதம் தவெக.. அடுத்த மாதம் திமுக..

image

கரூர் சம்பவத்தில் சாட்சி விசாரணைக்காக அழைக்கப்பட்ட விஜய்யிடம் 56 கேள்விகள் கேட்கப்பட்டதாக கூறப்படுகிறது. அவரை CBI இப்படி குடைய காரணம் பாஜகவின் தேர்தல் அரசியல் கணக்கு என்கின்றனர் அரசியல் நோக்கர்கள். இந்த மாதம் தவெகவை புரட்டியெடுக்கும் பாஜக, அடுத்த மாதம் திமுகவை குறிவைத்திருப்பதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. அமைச்சர்களுக்கு நெருக்கமானவர்களை ED ரேடாருக்குள் கொண்டு வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

News January 14, 2026

மோசமான கமெண்ட்ஸ்.. Insta-வை காலி செய்த Toxic நடிகை

image

‘டாக்ஸிக்’ பட டீசர், ஆபாசக்காட்சிக்காக கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. அதில் நடித்த பிரேசில் நடிகை Beatriz Taufenbach-ன் இன்ஸ்டா ID’யை கண்டுபிடித்த ரசிகர்கள், அவரை மிக மோசமாக விமர்சித்தாக கூறப்படும் நிலையில், அவர் தனது இன்ஸ்டா அக்கவுண்டை டெலிட் செய்துள்ளாராம். நடிகையை கடுமையாக விமர்சிப்பவர்கள் ஏன் யஷ்ஷை விமர்சிக்கவில்லை எனவும் சிலர் கேள்வி எழுப்பி வருகின்றனர். நீங்க என்ன சொல்றீங்க?

error: Content is protected !!