News August 20, 2025
டெல்லியில் 3 நாள் மாநாடு – புதுச்சேரி சபாநாயகர் பங்கேற்பு

சட்டப்பேரவைத் தலைவர்கள் மாநாடு டெல்லியில் ஆக.23, 24, 25 ஆகிய 3 நாள்கள் நடக்கிறது. இதில் புதுவை பேரவைத் தலைவர் செல்வம் பங்கேற்கிறார். மேலும், அனைத்து மாநில சட்டப்பேரவைத் தலைவர்கள் பங்கேற்கும் இந்த மாநாட்டையொட்டி, 23-ம் தேதி டெல்லி முதல்வர் ரேகா குப்தா விருந்தளிக்கிறார். 24-ல் முறைப்படி இம்மாநாட்டை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைத்துப் பேசுகிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News January 24, 2026
திருப்பதி – புதுச்சேரி இடையேயான ரயில் நேரம் மாற்றம்

திருப்பதி – புதுச்சேரி இடையே இயக்கப்படும் தினசரி மெமு விரைவு ரயில் (வண்டி எண்: 16111) கால அட்டவணையில் குறிப்பிட்ட சில ரயில் நிலையங்களில் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய நேர மாற்றம் வரும் குடியரசு தினமான ஜன.26 முதல் நடைமுறைக்கு வருகிறது. குறிப்பாக செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த மதுராந்தகம் மற்றும் மேல்மருவத்தூர் ஆகிய நிலையங்களில் ரயில் வந்து சேரும் நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
News January 24, 2026
புதுவை: உங்க பணத்தை பாதுகாக்க CLICK HERE!

புதுவை மக்களே.. உங்கள் Gpay, phonepe, paytm போன்றவற்றில் தானாக பணம் போகிறதா? அதனை தடுக்க அருமையான வழி. அதற்கு <
News January 24, 2026
பள்ளிக்கல்வித் துறை எச்சரிக்கை: போராட்டத்தில் ஈடுபட்டால் பணிநீக்கம்…

புதுவை பள்ளிக்கல்வித் துறையின் கீழ் பணிபுரியும் ஒப்பந்த ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபடுவது சட்டவிரோதமானது எனவும் உரிய அனுமதியின்றி பணிக்கு வராமல் போராட்டத்தில் ஈடுபடுவது சட்டப்படி தவறு.போராட்டங்களில் ஈடுபடும் ஆசிரியர்களின் ஒப்பந்தம், தேவைப்பட்டால் உடனடியாக ரத்து செய்யப்படும்.பணிக்கு வராத நாட்களுக்கான ஊதியம் வழங்கப்பட மாட்டாது என எச்சரிக்கை பள்ளி கல்வித்துறை இயக்குனர் ஏ.எஸ். சிவகுமார் அறிவிப்பு..


