News August 20, 2025
தர்மபுரியில் திருமணத்திற்கு அரசு தரும் 4 கிராம் தங்கம்

தர்மபுரியில் வரும் 14.09.2025 அன்று 18 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடத்தி வைக்கப்பட உள்ளது. இதில் 4 கிராம் தங்கம், ஆடை, மாலை, மெத்தை, பீரோ, கட்டில், தலையணை, பாய், கை கடிகாரம், மிக்ஸி, பூஜை பொருட்கள், பாத்திரங்கள், மணமக்கள் வீட்டினர், 20 பேருக்கு அறுசுவை விருந்து உள்ளிட்டவை வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் தருமபுரி இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் அலுவலகத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.
Similar News
News February 8, 2026
தருமபுரி மக்களுக்கு ஹாப்பி நியூஸ்!

தருமபுரி பழைய புறநகர் பேருந்து நிலையத்திலிருந்து நாளை காலை 6 மணி முதல் அரூர், கடத்தூர், பொம்மிடி, உத்தங்கரை, பாப்பிரெட்டிப்பட்டி, திருவண்ணாமலை மற்றும் திருப்பத்தூர் பேருந்துகள் வழக்கம்போல் இயங்கும் என மாவட்ட ஆட்சியர் சாந்தி அறிவித்துள்ளார். புதிய பேருந்து நிலைய மாற்றத்தால் ஏற்பட்ட சிரமங்களைத் தவிர்க்க எடுக்கப்பட்ட இந்த அதிரடி முடிவால் பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
News February 8, 2026
தருமபுரி: ரேஷன் கடையில் ரேகை விழவில்லையா?

ரேஷன் கடையில் கைரேகை சரியாக வேலை செய்யாததால் நமக்கு பின்னால் வந்தவர்கள் நமக்கு முன்னால் பொருட்கள் வாங்கி செல்வர். இந்த சிக்கலை தீர்க்க <
News February 8, 2026
தருமபுரி: இந்த கார்டு இருந்தால் மாதம் ரூ.3000

இ-ஷ்ரம் அட்டை அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான மத்திய அரசின் சமூக பாதுகாப்புத் திட்டமாகும். இதை 16-59 வயதுக்குள் உள்ள, வருமானவரி செலுத்தாத தொழிலாளர்கள் பெறலாம். விபத்து மரணத்திற்கு ரூ.2 லட்சம், ஊனத்திற்கு ரூ.1 லட்சம் காப்பீடு கிடைக்கும். PM-SYM மூலம் 60 வயதுக்கு பின் ரூ.3,000 மாத பென்ஷன் பெறலாம். ஆதார், மொபைல் எண் வங்கி விவரங்களுடன் <


