News August 20, 2025
சிவகங்கை: டிகிரி முடித்தால் ரூ.64,480 சம்பளத்தில் வங்கி வேலை

சிவகங்கை மக்களே, ரெப்கோ வங்கியில் காலியாக உள்ள 30 கிளார்க் காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏதேனும் ஒரு டிகிரி முடித்த தகுதியான 21 வயது முதல் 28 வயதுக்குட்பட்டவர்கள் <
Similar News
News August 20, 2025
சிவகங்கை: உயர்வுக்கு படி முகாம் தேதி அறிவிப்பு

சிவகங்கை மாவட்டம் 2024-25ஆம் கல்வியாண்டில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பயின்ற, தேர்ச்சி / தேர்ச்சி பெறாத, தேர்வு எழுதாத மொத்தம் 1,292 மாணவர்கள் பயன்பெறும் வகையில், வரும் 22.8.2025 அன்று சிவகங்கை மருதுபாண்டியர் நகர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாக கூட்டரங்கில், “உயர்வுக்குப்படி முகாம்-2025” நடைபெறவுள்ளது. இதில் மாணவர்கள் பங்கேற்று பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் பொற்கொடி தெரிவித்துள்ளார்.
News August 20, 2025
நாளை நடைபெறும் முகாம் அட்டவணை

காரைக்குடி, சிவகங்கை, தேவகோட்டை, காளையார் கோவில், திருப்பத்தூர், சிங்கம்புணரி உட்பட்ட பகுதிகளில் நாளை (ஆக.21) நடைபெறும் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமிற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. காலை 10 மணி முதல் மாலை 3:30 மணி வரை நடைபெற இருப்பதால் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கை மனுக்களை கொடுத்து பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் பொற்கொடி தெரிவித்துள்ளார்.
News August 20, 2025
மனித நேய ஜனநாயக கட்சி பதில் அளிக்க உத்தரவு

சிவகங்கை மாவட்ட மனித நேய ஜனநாயக கட்சி சென்னையில் உள்ள முதன்மைத் தேர்தல் அலுவலகத்தில் வரும் 26.8.25ஆம் தேதிக்கு முன்னர் நேரில் ஆஜராகி தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்த பின்னரும் கடந்த 6 ஆண்டுகளாக எவ்வித தேர்தலிலும் பங்கேற்காததன் காரணத்தை விளக்கம் அளிக்குமாறு மாவட்ட ஆட்சியர் பொற்கொடி இன்று (ஆக.20) தெரிவித்துள்ளார்.