News August 20, 2025
மானியத்திற்கான தகுதி வரம்புகள்

இலவச மாட்டு கொட்டகை அமைக்கும் திட்டம் கீழ் மானியம் பெற, 100 நாள் வேலை திட்ட அட்டை, ஆதார், ரேஷன் கார்டு, வாக்காளர் அட்டை, சிட்டா ஆகிய ஆவணங்கள் தேவை. இதற்கு 100 நாள் வேலை திட்ட உறுப்பினர்களுக்கும், ஆவின் நிறுவனத்திற்கு பால் விநியோகம் செய்பவர்களுக்கும் முன்னுரிமை வழங்கப்படும். இதற்கு எந்தவித முதலீடும் செய்யத் தேவை இல்லை. உழைத்தால் மட்டுமே போதுமானது. ஷேர் பண்ணுங்க
Similar News
News August 20, 2025
கள்ளக்குறிச்சி: 4 மாணவர்கள் பள்ளியை விட்டு நீக்கம்

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே ஆசனூர் அரசு மேல்நிலைப்பள்ளி பள்ளியில் ஒழுங்கீனமாக மது அருந்திவிட்டு ஆசிரியர்களிடம் 11ஆம் வகுப்பை சேர்ந்த 4மாணவர்கள் தகராறில் ஈடுபட்டனர். இதனால் மாணவர்களுக்கு நேற்று தலைமை ஆசிரியர் பள்ளி மேலாண்மை குழு SMC பெற்றோர் ஆசிரியர் கழகத்தால் (PTA) ஆலோசனை அடிப்படையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மாற்று சான்றிதழ் (TC) வழங்கப்பட்டு பள்ளியில் இருந்து நீக்கப்பட்டனர்.
News August 20, 2025
கள்ளக்குறிச்சி: விவசாயிகளுக்கு ரூ. 2.10 லட்சம் மானியம்

விவசாயத்தில் கால்நடைகளின் பங்களிப்பை ஊக்குவிக்கும் வகையில், தமிழக அரசு சார்பில் ஏழை விவசாயிகளுக்கு இலவச மாட்டு கொட்டகை அமைக்க ரூ.2.10 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இதற்கான விண்ணப்பங்களை விவசாயிகள் கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள வட்டார வளர்ச்சி அலுவலகத்தை அணுகி விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க.. <<17460294>>தொடர்ச்சி<<>>
News August 20, 2025
உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள்

உங்களுடன் ஸ்டாலின் திட்டம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உளுந்தூர்பேட்டை, கள்ளக்குறிச்சி, ரிஷிவந்தியம். திருக்கோவிலூர், சின்னசேலம் , சங்கராபுரம் ஆகிய பகுதிகளுக்கு நாளை 21/8/2025 வியாழக்கிழமை நடைபெற உள்ளது. இங்கு 13 துறைகளைச் சார்ந்த 43 வகையான சேவைகளை பெறலாம் பிறப்புச் சான்றிதழ் வருமானவரி சான்றிதழ் கலைஞர் மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பிக்க தவறியோர் மீண்டும் விண்ணப்பிக்கலாம்.