News August 20, 2025
தாராபுரம்: இலவச தகவல் அறியும் உரிமை சட்ட பயிற்சி

திருப்பூர்: தாராபுரம் சட்டமன்ற தொகுதி, மூலனூர் ஒன்றியம், மூலனூர் அறப் போர் இயக்கத்தின் சார்பில் வருகிற ஆக.23ஆம் தேதி காலை 10.30 மணிக்கு மூலனூர் சார் பதிவாளர் அலுவலகம் அருகில் உள்ள திலகம் திருமண மண்டபத்தில், இலவச தகவல் அறியும் உரிமைச் சட்டம் பற்றிய பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது. இந்த வாய்ப்பை அனைவரும் தவறாமல் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
Similar News
News August 20, 2025
திருப்பூர்: திருமணத் தடையா? இங்க போங்க!

திருப்பூர் மாவட்டம் கடத்தூரில் உள்ளது, புகழ்பெற்ற அர்ச்சுனேஸ்வரர் ஆலயம். இந்த ஆலயத்திற்கு ஆயிரம் ஆண்டு கால வரலாறு உள்ளதாம். அமராவதி நதிக்கரையில் அமைந்துள்ள இந்தக் கோயிலில் வழிபட்டால், திருமணத் தடை நீங்கும் எனப் புராணம் சொல்கிறது. ஆம், குலோத்துங்க சோழன் மகளின் மாங்கல்ய தோஷத்தை தீர்த்து வைத்த தலம் இது என நம்பப்படுகிறது. திருமணத் தடை உள்ள உங்கள் நண்பர்களுக்கு இதை SHARE பண்ணுங்க!
News August 20, 2025
திருப்பூரில் நாளை மின் ரத்து

திருப்பூர் துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நாளை(ஆக.21) நடைபெறுவதால் அவினாசி ரோடு, புஷ்பா தியேட்டர், காலேஜ் ரோடு, ஒடக்காடு, பங்களா ஸ்டாப், காவிரி வீதி, ஸ்டேன்ஸ் வீதி, ஹவுசிங் யூனிட், முத்துச்சாமி வீதி, கே.ஆர்.இ. லே-அவுட், எஸ்.ஆர். நகர் வடக்கு, நேதாஜி வீதி, குமரன் வீதி, உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
News August 20, 2025
திருப்பூர்: திருடு போன PHONE கண்டுபிடிப்பது எப்படி?

உங்கள் Phone காணாமல் போயிட்டா? இல்ல திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது <