News August 20, 2025

2-வது மனைவி Trip.. குழப்பும் மாதம்பட்டி ரங்கராஜ்?

image

நடிகர் மாதம்பட்டி ரங்கராஜுக்கும் தனக்கும் திருமணம் நடந்ததாக ஜாய் கிரிஸில்டா X தளத்தில் பதிவிட்டார். முதல் மனைவியை அவர் விவாகரத்து செய்யவில்லை எனக் கூறப்பட்ட நிலையில், சில நாள்கள் முன்பு, ரங்கராஜ் தன் முதல் மனைவியுடன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட <<17386595>>போட்டோஸ் <<>>வைரலானது. இதுவே குழப்பமாக இருந்த நிலையில், ரங்கராஜுடன் Trip சென்றுள்ள வீடியோ ஒன்றை ஜாய் கிரிஸில்டா வெளியிட்டுள்ளார். புரியலயே?

Similar News

News February 4, 2026

UPSC தேர்வு அட்டவணை வெளியானது

image

933 காலியிடங்களுக்கான UPSC CSE(Civil Services Exam) அட்டவணை வெளியாகியுள்ளது. இதற்கான முதல்நிலைத் தேர்வு வரும் மே 24-ம் தேதி நடைபெறுகிறது. வயது வரம்பு 21-32. விண்ணப்ப கட்டணம்: ₹100 (பெண்கள், SC/ST, மாற்றுத்திறனாளிகளுக்கு விலக்கு) விண்ணப்பதாரர்கள் 10-ம் வகுப்பு சான்றிதழ் விவரங்களுடன் <>upsconline.nic.in<<>> என்ற இணையதளத்தில் பிப்.24-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். SHARE IT.

News February 4, 2026

இத செஞ்சா குழந்தைகள் உங்கள் பேச்ச கேட்பாங்க..

image

குழந்தைகள் உங்கள் பேச்சை மதிப்பதே இல்லை என கவலையா? இந்த சிம்பிள் விஷயங்கள் உங்கள் மீதான அவர்களது பார்வையை மாற்றும். ▶ காலையில் குழந்தையை அன்பாக எழுப்புங்கள் ▶அவர்கள் செய்யும் சின்ன சின்ன விஷயத்தையும் பாராட்டுங்கள் ▶உணவு நேரத்தை இனிமையாக மாற்றுங்கள் ▶குழந்தைகள் முன் சண்டையிட வேண்டாம் ▶மற்றவர்கள் முன் அவர்களை திட்டாதீர்கள் ▶கடுமையான வார்த்தைகளை பயன்படுத்த வேண்டாம். SHARE IT.

News February 4, 2026

பேராபத்தை மறைக்க பார்க்கும் மோடி அரசு: அமைச்சர் ரகுபதி

image

வர்த்தக ஒப்பந்தத்தில் அமெரிக்காவிடம் இருந்து விவசாய பொருள்களை இந்தியா இறக்குமதி செய்யும் என்ற மத்திய அரசின் முடிவு விவசாயிகளுக்கு பெரும் பாதகத்தை ஏற்படுத்தும் என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். ஆனால், 18% வரி குறைப்பை காட்டி இந்த பேராபத்தை மோடி அரசு மறைக்க பார்ப்பதாகவும், போரே நடக்காமல் ஏவுகணைகள் ஏவாமல் இந்தியா மீது பொருளாதாரப் போரை அமெரிக்க நடத்தியுள்ளதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

error: Content is protected !!