News August 20, 2025
திமுக குடும்ப கட்சி, அதிமுக ஜனநாயக கட்சி: இபிஎஸ்

திமுக என்பது குடும்ப கட்சி என்றும், கருணாநிதி தொடங்கி இன்பநிதி வரை அரசியலுக்கு வந்துவிட்டனர் என இபிஎஸ் விமர்சித்துள்ளார். ஆனால் அதிமுக அப்படிப்பட்ட கட்சி அல்ல, ஜனநாயகம் உள்ள கட்சி. யார் உண்மையாக உழைக்கிறார்களோ அவர்களின் வீட்டுக் கதவைத் தட்டி பதவிகள் வழங்கப்படும் என்றார். திமுக அமைச்சர்கள் தற்போது ED ரெய்டை கண்டு பயந்துபோய் உள்ளதாகவும் கூறினார்.
Similar News
News January 23, 2026
காங்கிரஸில் மீண்டும் பிரச்னை வெடித்தது

காங்., MP சசி தரூர் மீது ராகுல்காந்தி கடும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. சமீபத்தில் ராகுல் கேரளாவுக்கு சென்றிருந்தார். அப்போது நடந்த கூட்டத்திற்கு சசி தரூருக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. இதனால் தனக்கு உரிய மரியாதை வழங்கப்படுவதில்லை என சசி தரூர் கருதுவதாக சொல்கின்றனர். ஆனால், சமீபகாலமாக சசி தரூர் <<9751434>>மோடியை<<>> பாராட்டி கருத்துகள் சொல்வதால் காங்., தலைமை கடுப்பில் இருக்கலாம் என்கின்றனர்.
News January 23, 2026
TN-க்கு NDA அரசு செய்த துரோகங்கள்: ஸ்டாலின்

தேர்தல் சீசன் வந்தால் மட்டும் TN பக்கம் அடிக்கடி வருகிறார் <<18931688>>மோடி<<>> என ஸ்டாலின் விமர்சித்துள்ளார். NDA கூட்டணியின் துரோகங்களை TN பட்டியலிட்டு வருவதாக கூறிய அவர், TN-க்கான கல்வி நிதி, நீட் விலக்கு, எய்ம்ஸ், பேரிடர் நிதி, கோவை & மதுரை மெட்ரோ எப்போது வரும் என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், தொடர்ந்து துரோகங்களை மட்டுமே செய்யும் பாஜக கூட்டணிக்கு TN எப்போதுமே தோல்வியைத்தான் தரும் என பதிவிட்டுள்ளார்.
News January 23, 2026
‘VB-G RAM G’ திட்டத்திற்கு எதிராக பேரவையில் தீர்மானம்

மத்திய அரசின் ‘VB-G RAM G’ திட்டத்திற்கு எதிராக சட்டப்பேரவையில் CM ஸ்டாலின் தனித் தீர்மானத்தை முன்மொழிந்தார். அத்தீர்மானத்தில், *2005-ல் கொண்டுவரப்பட்ட MGNREGA திட்டம் மகாத்மா காந்தியின் பெயரிலேயே தொடர வேண்டும். *மாநில அரசு 40% நிதி பங்கீட்டை நீக்க வேண்டும். *இத்திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு நிலுவையில் உள்ள ₹2,113 கோடியை உடனடியாக விடுவிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் இடம் பெற்றுள்ளன.


