News August 20, 2025
சொத்துப் பிரச்னைகளை தீர்க்கும் ஸ்ரீசுவர்ணாகர்ஷணர்

அஷ்டாஷ்டகர்களில் பொன் சொரியும் ஆதிசக்தி ஸ்ரீசுவர்ண ஆகர்ஷண பைரவ மூர்த்தி அருட்குணம் கொண்டவர் என்று மந்திரநூல்கள் போற்றுகின்றன. இத்தகு பைரவர் வீற்றிருக்கும் திருத்தலம் குடந்தை செம்பியவரம்பலில் மட்டுமே உள்ளது. ஆனி தேய்பிறை அஷ்டமி நாளில் இக்கோயிலுக்கு சென்று, செஞ்சந்தனகாப்பு செய்து, பூசணி தீபமேற்றி, மிளகு வடை படைத்து வழிபட்டால் நிலம் & சொத்து தொடர்பான பிரச்னைகள் நீங்கும் என்பது ஐதீகம்.
Similar News
News February 7, 2026
தெய்வங்களை அவமதித்தால் அமைதி கூடாது: பவன் கல்யாண்

ஒவ்வொரு இந்து பக்தருக்கும் தர்மத்தை காக்கும் பொறுப்பு உள்ளதாக ஆந்திரா DCM பவன் கல்யாண் கூறியுள்ளார். யாராவது இந்து தெய்வங்களை அவமதித்தாலோ, தர்மத்தை கேலிசெய்தாலோ; அமைதியாக இருக்காமல் நம் வலிமை வெளிப்படுத்த வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். இந்து தர்மத்தை காப்பது என்பது பிற மதங்களுக்கு எதிராக இருப்பது அல்ல என்றும், நம் நம்பிக்கையை பாதுகாப்பதே எனவும் குறிப்பிட்டுள்ளர்.
News February 7, 2026
நேரு பொன்மொழிகள்!

*செயலுக்கு முன்பே விளைவுகள் குறித்து எண்ணி அஞ்சுகின்ற கோழைக்கு வெற்றி என்பது வெகுதூரம் *சொல்லும் செயலும் பொருந்தி வாழ்கின்ற மனிதனே உலகத்தில் மகிழ்ச்சியாக வாழ்கின்ற மனிதன் *உண்மையை சில சமயம் அடக்கி வைக்க முடியும் ஆனால் ஒடுக்கிவிட முடியாது *பிரச்னை இல்லாத வாழ்க்கையில் சுவாரஸ்யம் இருக்காது *முயற்சிகள் செய்துகொண்டிருப்பவர்களைத் தான் வெற்றிகள் தேடி வரும்.
News February 7, 2026
குடிநீர் பாட்டிலில் மைக்ரோ பிளாஸ்டிக்.. HC புதிய உத்தரவு

பிளாஸ்டிக் பாட்டில் மட்டுமின்றி பாக்கெட்டில் அடைக்கப்படும் உப்பு, சர்க்கரையில் மைக்ரோ பிளாஸ்டிக் இருப்பது FSSAI-ன் முதற்கட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. இதுகுறித்த வழக்கை விசாரித்த சென்னை HC, பிளாஸ்டிக் பாட்டிலில் மைக்ரோ பிளாஸ்டிக் உள்ளது குறித்த எச்சரிக்கை வாசகம் இனி இடம்பெற வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. இதனால், விலங்குகளுக்கும் தீங்கு ஏற்படுவதாக கூறிய HC, ஆய்வுகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தியது.


