News August 20, 2025
செல்வத்தை ஈர்க்கும் தாமரை மணிமாலை

மகாலட்சுமி வீற்றிருப்பதாக கூறப்படும் தாமரையில் உள்ள விதைகளைக் கொண்டு செய்யப்படும் மாலையான தாமரை மணிமாலைக்கு தெய்வீக குணம் உண்டு என்று ஆன்மிகம் கூறுகிறது. அந்த மாலை ஓரிடத்தில் உள்ளதெனில் அங்கு மகாலட்சுமி வருவார் எனவும், தாமரை மணிமாலை செல்வத்தை ஈர்க்கும், தடைகளை நீக்கி உயர்வான வாழ்க்கையை அளிக்கும், நேர்மறை சக்தியை அளிக்கும் என்றும் ஆன்மிகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News August 20, 2025
2-வது மனைவி Trip.. குழப்பும் மாதம்பட்டி ரங்கராஜ்?

நடிகர் மாதம்பட்டி ரங்கராஜுக்கும் தனக்கும் திருமணம் நடந்ததாக ஜாய் கிரிஸில்டா X தளத்தில் பதிவிட்டார். முதல் மனைவியை அவர் விவாகரத்து செய்யவில்லை எனக் கூறப்பட்ட நிலையில், சில நாள்கள் முன்பு, ரங்கராஜ் தன் முதல் மனைவியுடன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட <<17386595>>போட்டோஸ் <<>>வைரலானது. இதுவே குழப்பமாக இருந்த நிலையில், ரங்கராஜுடன் Trip சென்றுள்ள வீடியோ ஒன்றை ஜாய் கிரிஸில்டா வெளியிட்டுள்ளார். புரியலயே?
News August 20, 2025
கம்யூனிஸ்ட் கட்சியை காட்டிக் கொடுத்ததே திமுக தான்: EPS

கூட்டணிக்காக கம்யூனிஸ்ட் கட்சிக்கு திமுக நிதி கொடுத்ததாக வெளியான செய்திக்கு அவர்களால் மறுப்பு தெரிவிக்க முடியுமா என EPS கேள்வி எழுப்பியுள்ளார். வேலூர் பரப்புரையில் பேசிய அவர், கம்யூனிஸ்ட் கட்சி பணம் வாங்கியதாக காட்டிக் கொடுத்ததே திமுக தான் என்றும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார். போதைப் பொருள்களைக் கட்டுப்படுத்த 2.0, 3.0 என கடைசி வரை ‘ஓ’ போட்டதுதான் மிச்சம் என்றும் விமர்சித்தார்.
News August 20, 2025
ஹிமாச்சல், பாகிஸ்தானில் நிலநடுக்கம்

ஹிமாச்சலின் சம்பா மாவட்டத்தில், இன்று அதிகாலை 3:27 மணிக்கு 3.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் (NCS) தெரிவித்துள்ளது. ஏற்கனவே குலு உள்ளிட்ட பகுதிகளில் ஏற்பட்ட மேகவெடிப்பால் பெருவெள்ளம் ஏற்பட்டு மக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. அதேநேரம், பாகிஸ்தானிலும் காலை 2:38 மணிக்கு 3.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக NCS கூறியுள்ளது.