News August 20, 2025
இன்றைய நல்ல நேரம்

▶ஆகஸ்ட் 20 – ஆவணி 4 ▶ கிழமை: புதன் ▶ நல்ல நேரம்: 9:15 AM – 10:15 AM, 4:45 PM – 5:45 PM ▶ கெளரி நல்ல நேரம்: 10:45 AM – 11:45 AM & 6:30 PM – 7:30 PM ▶ராகு காலம்: 12:00 PM – 1:30 PM ▶ எமகண்டம்: 7:30 AM – 9:00 AM ▶ குளிகை: 10:30 AM – 12:00 PM ▶ திதி: துவாதசி ▶ சூலம்: வடக்கு ▶பரிகாரம்: பால் ▶பிறை: தேய்பிறை.
Similar News
News August 20, 2025
கம்யூனிஸ்ட் கட்சியை காட்டிக் கொடுத்ததே திமுக தான்: EPS

கூட்டணிக்காக கம்யூனிஸ்ட் கட்சிக்கு திமுக நிதி கொடுத்ததாக வெளியான செய்திக்கு அவர்களால் மறுப்பு தெரிவிக்க முடியுமா என EPS கேள்வி எழுப்பியுள்ளார். வேலூர் பரப்புரையில் பேசிய அவர், கம்யூனிஸ்ட் கட்சி பணம் வாங்கியதாக காட்டிக் கொடுத்ததே திமுக தான் என்றும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார். போதைப் பொருள்களைக் கட்டுப்படுத்த 2.0, 3.0 என கடைசி வரை ‘ஓ’ போட்டதுதான் மிச்சம் என்றும் விமர்சித்தார்.
News August 20, 2025
ஹிமாச்சல், பாகிஸ்தானில் நிலநடுக்கம்

ஹிமாச்சலின் சம்பா மாவட்டத்தில், இன்று அதிகாலை 3:27 மணிக்கு 3.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் (NCS) தெரிவித்துள்ளது. ஏற்கனவே குலு உள்ளிட்ட பகுதிகளில் ஏற்பட்ட மேகவெடிப்பால் பெருவெள்ளம் ஏற்பட்டு மக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. அதேநேரம், பாகிஸ்தானிலும் காலை 2:38 மணிக்கு 3.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக NCS கூறியுள்ளது.
News August 20, 2025
CM, அமைச்சர்களின் பதவி பறிப்பு.. வருகிறது புதிய சட்டம்

CM, அமைச்சர்கள் கைதாகி 30 நாட்கள் சிறையில் இருந்தாலே ‘பதவி நீக்கம்’ செய்யும் புதிய சட்டத்தை லோக் சபாவில் அமித்ஷா இன்று அறிமுகம் செய்கிறார். முறைகேடு புகார்களில் செந்தில் பாலாஜி, கெஜ்ரிவால், சோரன் உள்ளிட்டோர் ED-யால் கைதாகி சிறைக்கு சென்றனர். ஆனால், அவர்களின் பதவி பறிக்கப்படவில்லை. 2 ஆண்டுகளுக்கு மேல் சிறைத்தண்டனை விதித்தால் மட்டுமே பதவி பறிக்கப்படும். இந்நிலையில், இந்த புதிய சட்டம் அறிமுகமாகிறது.