News August 20, 2025
ஒகேனக்கல் ஆற்றில் 1,45,000 கன அடி தண்ணீர் வத்து

தருமபுரி: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 1,45,000 கன அடியாக அதிகரித்துள்ளது. காவிரி நீர் பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் நீர்வரத்து ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒகேனக்கல் அருவியில் குளிப்பதற்கு நேற்று இரண்டாவது நாளாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
Similar News
News August 19, 2025
தருமபுரி மாவட்ட இரவு ரோந்து பணி விவரம்

தருமபுரி மாவட்ட காவல்துறை சார்பில் இன்று (ஆகஸ்ட் 19) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்கள் விவரம் வெளியிட்டுள்ளது. தலைமை அதிகாரியாக S.கரிகால் பாரிசங்கர் நியமிக்கப்பட்டுள்ளார். தருமபுரி புஷ்பராணி, அரூர் செந்தில்ராஜ், பென்னாகரம் முரளி மற்றும் பாலக்கோடு பார்த்திபன் ஆகியோர் பொறுப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களை பொதுமக்கள் அவசர தேவை எனில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News August 19, 2025
தருமபுரி மாவட்டத்தில் வேலைவாய்ப்பு

தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில், வரும் 22.08.2025 வெள்ளிக்கிழமை அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது என தருமபுரி மாவட்ட ஆட்சியர் சதீஸ் தெரிவித்துள்ளார். இம்முகாமில், பல்வேறு தனியார் நிறுவனங்கள் கலந்துகொண்டு, விற்பனையாளர், மார்க்கெட்டிங் எக்ஸிக்யூட்டிவ், சூப்பர்வைசர் போன்ற பணிகளுக்கு தகுதியான நபர்களை தேர்வு செய்ய உள்ளனர். ஷேர் பண்ணுங்க!
News August 19, 2025
ஒகேனக்கல்லில் நீர் வரத்து அதிகரிப்பால் கலெக்டர் ஆய்வு

தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் நீர்வரத்து அதிகரித்ததைத் தொடர்ந்து, தர்மபுரி மாவட்ட ஆட்சியர் சதீஷ் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.மணி ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர். அப்போது, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினர். இந்த ஆய்வின்போது, பென்னாகரம் ஒன்றிய பொறுப்பாளர் மடம் முருகேசன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.