News August 20, 2025
நாமக்கல்லில் முட்டை விலையில் மாற்றமில்லை!

நாமக்கல்லில் நேற்று (ஆகஸ்ட் 19) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் கூட்டத்தில், ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ.5 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. மழை மற்றும் குளிர் போன்ற பல்வேறு காரணங்களால் முட்டை நுகர்வு அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, முட்டை விலையில் எவ்வித மாற்றமும் இல்லாமல், அதன் பண்ணை கொள்முதல் விலை ரூ.5 ஆகவே தொடர்ந்து நீடிக்கிறது.
Similar News
News February 2, 2026
நாமக்கல்: ரூ.1,05,280 சம்பளத்தில்.. வங்கி வேலை!

நாமக்கல் மக்களே, பேங்க் ஆப் பரோடா வங்கியில் காலியாக உள்ள 418 Specialist Officer பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. 22-37 வயதுகுட்பட்ட B.E/B.Tech, M.E/M.Tech, MCA படித்தவர்கள் பிப்.19-க்குள் இங்கு<
News February 2, 2026
பரமத்திவேலூர் அருகே திடீர் தீ விபத்து!

பரமத்திவேலூர் அருகே உள்ள ஜங்கமநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் அருள். இவருக்கு சொந்தமான லாரியில் வைக்கோல் கட்டுகளை ஏற்றிக்கொண்டு திருச்சியில் இருந்து கூடச்சேரி நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது ப.வேலூர் அருகே பில்லூர் பகுதியில் லாரி சென்றபோது திடீரென லாரியில் இருந்த வைக்கோல் கட்டுக்கள் தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதுகுறித்து தகவல் அறிந்த நாமக்கல் தீயணைப்பு துறையினர், விரைந்து வந்து தீயை அணைத்தனர்
News February 2, 2026
ராசிபுரம் அருகே கோர விபத்து: இரு பெண்கள் பலி!

ராசிபுரம் அருகே பாச்சலைச் சேர்ந்த சண்முகம், தனது குடும்பத்தினர் 5 பேருடன் ஒரே டூவீலரில் காளிப்பட்டி கோவிலுக்குச் சென்று திரும்பும்போது, அடையாளம் தெரியாத கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பரிமளா மற்றும் சுதா ஆகிய இருவர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். படுகாயமடைந்த சண்முகம் மற்றும் இரு குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து புதுச்சத்திரம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.


