News April 8, 2024

கூட்டணி கட்சிகளுக்கு திமுக அறிவுறுத்தல்

image

தமிழகத்தில் I.N.D.I.A கூட்டணி 8 தொகுதிகளில் இழுபறியைச் சந்திக்கும் என ரகசிய தகவலை ஆளும் தரப்புக்கு உளவுத்துறை ரிப்போர்ட்டாக அளித்துள்ளதாம். அதில், நான்கு தொகுதிகள் கூட்டணிக் கட்சிகளின் தொகுதிகள் என்பதால் அக்கட்சிகளிடம் திமுகவின் தலைமை நேரடியாக பேசியுள்ளதாகக் கூறப்படுகிறது. அதற்கான காரணத்தை ஆராய்ந்து, உடனடியாக சிக்கல்களை எப்படியாவது சரிசெய்யவும் அவர்களிடம் திமுக அறிவுறுத்தியுள்ளதாம்.

Similar News

News November 5, 2025

இன்று வானில் அதிசயம் நடக்கிறது

image

இன்று (நவ.5) மாலை 6.30-ல் இருந்து 6:49 மணி வரை பீவர் சூப்பர் மூன் (Beaver Supermoon) தென்படவுள்ளது. சாதாரண நாளில் தோன்றும் முழு நிலவுடன் ஒப்பிடுகையில் சுமார் 14% பெரிதாகவும், 30% அதிக பிரகாசத்துடனும் தோன்றும். வானிலை தெளிவாக இருந்தால், இந்தியா முழுவதும் இந்த அழகிய வானியல் நிகழ்வை அனைவரும் காணமுடியும் என வானியல் ஆய்வாளர்கள் சொல்கின்றனர். 2025-ன் கடைசி சூப்பர் மூன் இதுதான். மிஸ் பண்ணிடாதீங்க!

News November 5, 2025

ஹர்மன்பிரீத் கவுரின் கணவர் யார்? தேடும் நெட்டிசன்கள்

image

உலகக்கோப்பையை வென்றதற்கு இந்திய மகளிர் அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கவுருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. ஆனால், அதே நேரத்தில் சிலர் அவரின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து அறிந்து கொள்ள தான் ஆர்வமாக இருக்கிறார்கள். அதேபோல, அவரது கையில் இருக்கும் டாட்டூவின் அர்த்தம் என்ன என்றும் தேடிக் கொண்டிருக்கிறார்கள். டாட்டூ பிரம்ம யந்திரா எனக் கூறப்படும் நிலையில், அவரது கணவர் குறித்த தகவல் இல்லை.

News November 5, 2025

விலை மொத்தம் ₹5000 குறைந்தது

image

ஆபரணத் தங்கத்தை தொடர்ந்து, வெள்ளி விலையும் தொடர்ந்து குறைந்துகொண்டே வருகிறது. இன்று வெள்ளி விலை கிராமுக்கு ₹2 குறைந்து ₹163-க்கும், கிலோ வெள்ளி ₹2000 குறைந்து ₹1,63,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. நேற்று ₹3000, இன்று ₹2000 என 2 நாளில் மொத்தம் ₹5000 குறைந்துள்ளது. சர்வதேச சந்தையில் தங்கம், வெள்ளி விலை சரிந்துள்ளதால், வரும் நாள்களில் மேலும் விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

error: Content is protected !!