News August 20, 2025

சேலம் மாநகர இரவு ரோந்து போலீசார் விவரம்

image

சேலம் மாநகரில் இன்று (ஆகஸ்ட் 19) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை, மாநகர காவல்துறை வெளியிட்டுள்ளது. சேலம் சரகம், அன்னதானப்பட்டி, கொண்டலாம்பட்டி, அம்மாபேட்டை, ஆகிய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரை புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். உதவிக்கு மாநகர கட்டுப்பாட்டு எண்: 0427-2273100 அழைக்கலாம்.

Similar News

News August 20, 2025

சேலம்: PHONE காணாமல் போனால் என்ன செய்வது?

image

உங்கள் Phone காணாமல் போயிட்டா? இல்ல திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது <>இணையத்தில்<<>> செல்போன் நம்பர், IMEI நம்பர், தொலைந்த நேரம், இடம் மற்றும் உங்களின் தகவல்கள் ஆகியவற்றை பதிவிட்டு Complaint பண்ணலாம்! உடனே Phone Switch Off ஆகிவிடும். பின்பு உங்கள் Phone-யை டிரேஸ் செய்து Easy-ஆ கண்டுபுடிக்கலாம். கிட்டத்தட்ட 5 லட்சம் Phone இப்படி கண்டுபுடிச்சிருக்காங்க! SHARE பண்ணுங்க!

News August 20, 2025

சேலம் கோட்டத்தில் 200 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

image

ஆவணி அமாவாசை, வார இறுதி நாட்களையொட்டி தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் சேலம் கோட்டம் சார்பில் வரும் ஆக.22- ஆம் தேதி முதல் ஆக.25- ஆம் தேதி வரை 200 சிறப்பு பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னை, பெங்களூரு, ஓசூர், கோவை, மதுரை உள்ளிட்ட நகரங்களுக்கு சேலத்தில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

News August 20, 2025

மகளிர் உரிமைத்தொகை கேட்டு 67,904 பெண்கள் விண்ணப்பம்

image

சேலம் மாவட்டத்தில் இதுவரை 120 ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. இந்த முகாம்களில், ஒட்டுமொத்தமாக 1 லட்சத்து 26 ஆயிரம் பேர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனுக்களை அளித்துள்ளனர்.இந்த மனுக்களில், 67,904 பெண்கள் மகளிர் உரிமைத்தொகை கேட்டு விண்ணப்பித்துள்ளனர். அவர்களுக்கு உரிமைத்தொகை கிடைக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்பட்டு, தொகை வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் உறுதியளித்துள்ளார்.

error: Content is protected !!