News August 19, 2025
முத்தரசனுக்கு சவால் விட்ட EPS

2026 தேர்தலில் EPS சொந்தத் தொகுதியில் தோற்கடிக்கப்படுவார் என முத்தரசன் கூறியிருந்த நிலையில், உங்கள் அப்பாவே வந்தாலும் முடியாது என EPS சவால் விடுத்துள்ளார். வேலூர் தேர்தல் பரப்புரையில் பேசிய அவர், மக்களுக்காக உழைக்கும் தங்களுக்கு மக்கள் விசுவாசமாக இருந்து வாக்களிப்பார்கள் என்றார். அதிமுக – பாஜக கூட்டணியை தவறு எனக் கூறும் முத்தரசன், திமுக, பாஜகவுடன் கூட்டணி அமைத்ததை பற்றி பேச மறுப்பதாக கூறினார்.
Similar News
News January 21, 2026
இந்திய தொழிலதிபர்களுக்கு அழைப்பு

சுவீட்சர்லாந்தில் நடைபெறும் உலக பொருளாதார மாநாட்டில் அமெரிக்க அதிபர் டிரம்ப் தலைமையிலான வரவேற்பு நிகழ்ச்சிக்கு 7 இந்திய தொழிலதிபர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். டாடா சன்ஸ் தலைவர் சந்திரசேகரன், பாரதி ஏர்டெல் தலைவர் சுனில் மிட்டல், விப்ரோ CEO ஸ்ரீனிவாஸ், இன்ஃபோசிஸ் CEO சலீல் பரேக், பஜாஜ் ஃபின்சர்வ் தலைவர் சஞ்சீவ், மஹிந்திரா CEO அனிஷ் ஷா மற்றும் ஜூபிலண்ட் தலைவர் பார்தியா ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர்.
News January 21, 2026
தமிழ்நாடு போராட்டக்களமாக மாறியுள்ளது: அன்புமணி

சத்துணவுப் பணியாளர்களின் போராட்டம் மாணவர்களிடமும், அடித்தட்டு மக்களிடமும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என அன்புமணி கூறியுள்ளார். மேலும் TN போராட்டக்களமாக மாறியுள்ளதாகவும், போராட்டங்களை முடிவுக்கு கொண்டு வருவதற்கோ, கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கோ அரசு விரும்பவில்லை எனவும் அவர் சாடியுள்ளார். அரசு நிர்வாகத்தின் முதுகெழும்பாக உள்ள ஊழியர்களின் கோரிக்கையை அரசு நிறைவேற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
News January 21, 2026
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (ஜன.21) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email – way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.


