News August 19, 2025
ரயிலில் அதிக லக்கேஜுடன் பயணம்.. இனி அபராதம் உண்டு!

விமான பயணங்களை போல் ரயில் பயணங்களில் <<17452208>>அதிக லக்கேஜ் கொண்டு சென்றால் கட்டணம்<<>> வசூலிக்க இந்திய ரயில்வே முடிவெடுத்துள்ளது. அதிகபட்சமாக பயணி ஒருவர் முதல் ஏசி வகுப்பில் 70 கிலோ, இரண்டாம் ஏசி வகுப்பில் 50 கிலோ, மூன்றாம் ஏசி/ ஸ்லீப்பர் வகுப்பில் 40 கிலோ, பொது மற்றும் 2S-ல் 35 கிலோ வரை லக்கேஜ் எடுத்து செல்லலாம். இந்த எடை அளவுகளை விட அதிகமாக எடுத்துச் செல்லப்படும் லக்கேஜிற்கு அபராதம் வசூலிக்கப்படும்.
Similar News
News January 23, 2026
BREAKING: இரவில் அதிமுக கூட்டணியில் இணைந்தார்

NDA கூட்டணியில் அடுத்ததாக தென்னாட்டு மக்கள் கட்சி இணைந்துள்ளது. நேற்றிரவு, தென்னாட்டு மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் S.கணேஷ் தேவர் EPS-ஐ நேரில் சந்தித்து, அதிமுகவிற்கான தங்களது ஆதரவை உறுதி செய்தார். இந்நிகழ்வின்போது ராமநாதபுரம் அதிமுக மா.செ முனியசாமி உடனிருந்தார். மோடி தமிழகம் வருவதற்குள் NDA கூட்டணியை வலிமைப்படுத்தும் வேலைகள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
News January 23, 2026
பட்ஜெட்டை முன்னிட்டு அனைத்துக்கட்சி கூட்டம்

பட்ஜெட் கூட்டத்தொடர் துவங்கும் முன் எதிர்க்கட்சித் தலைவர்களை அழைத்து, அவர்களது கோரிக்கைகளை அரசு தரப்பு கேட்பது வழக்கம். அந்த வகையில், இந்தாண்டு 2 கட்டங்களாக நடைபெற உள்ள பட்ஜெட் கூட்டத்தொடரை முன்னிட்டு, எதிர்க்கட்சிகளின் கருத்துகளை கேட்பதற்காக வரும் 27-ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டத்தை மத்திய அரசு கூட்டியுள்ளது. நாடாளுமன்றத்தின் பிரதான கமிட்டி அறையில் இந்த கூட்டம் நடைபெற உள்ளது.
News January 23, 2026
கறிக்கோழி வளர்ப்பு பிரச்னைக்கு தீர்வு குழு

கறிக்கோழி வளர்ப்பு கூலியை உயர்த்துதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுடன் கறிக்கோழி பண்ணை உரிமையாளர்கள் போராடி வருகின்றனர். இந்நிலையில், கறிக்கோழி வளர்ப்பு குறித்து ஆய்வு செய்திட மாவட்ட அளவில் தொழில்நுட்பக் குழு அமைக்கப்பட்டு உள்ளது. இந்த குழு, பண்ணை உரிமையாளர்களுடன் ஆலோசனை நடத்தி, கோழி வளர்ப்பில் உள்ள பிரச்னை குறித்து ஆய்வு செய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


