News August 19, 2025
ஆன்லைன் சூதாட்டத்தை தடுக்க கேமிங் மசோதா அறிமுகம்

ஆன்லைன் சூதாட்டத்தை தடுக்க மக்களவையில் கேமிங் மசோதா நாளை அறிமுகம் செய்யப்படவுள்ளது. ஆன்லைன் சூதாட்டத்தில் ஏராளமான மோசடிகள் தொடர்ந்து அரங்கேறும் நிலையில் அதை தண்டனைக்குரிய குற்றமாக குறிப்பிட்டு PM மோடி தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் கேமிங் மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி பிரபலங்கள் ஆன்லைன் சூதாட்டத்தை விளம்பரப்படுத்த கூடாது. இதற்கு ஏற்கனவே 28% ஜிஎஸ்டி வரி உள்ளது.
Similar News
News August 20, 2025
MGR படத்தை பயன்படுத்த TVK-க்கு தகுதியில்லை: EX அமைச்சர்

மதுரை அருகே பாரபத்தியில் தவெகவின் 2-வது மாநாடு நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டுக்காக விஜய், MGR, அண்ணா படங்கள் கொண்ட பேனர் வைக்கப்பட்டுள்ளது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், இதுபற்றி பேசிய முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன், தவெகவின் இச்செயல் தேவையற்றது என்றும், அண்ணா, MGR படங்களைப் பயன்படுத்த தவெகவிற்கு தகுதியில்லை எனவும் விமர்சித்தார்.
News August 20, 2025
வெண்கலப் பதக்கம் வென்றார் மனு பாக்கர்

கஜகஸ்தானில் நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஷிப் துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் 10 மீட்டர் பிஸ்டல் பிரிவில் மனுபாக்கர் 219.7 புள்ளிகள் பெற்று வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். சீனாவை சேர்ந்த குயிங்கி மா 243.2 புள்ளிகள் பெற்று தங்கப்பதக்கமும், கொரியாவை சேர்ந்த ஜின் யாங் 241.6 புள்ளிகள் பெற்று வெள்ளியும் வென்றனர். அணி பிரிவில் மனுபாக்கர், சுர்சி சிங், பாலக் இணைந்து 1730 புள்ளிகள் பெற்று 3-ம் இடம்பிடித்தனர்.
News August 20, 2025
அர்ஜுன் தாஸுடன் நடிக்கும் ஐஸ்வர்யா லக்ஷமி

மாரி 1, 2 பாகங்கள், காதலில் சொதப்புவது எப்படி போன்ற படங்களை இயக்கியவர் பாலாஜி மோகன். இவர் தற்போது காதல் மற்றும் காமெடி கலந்த வெப்தொடர் ஒன்றை இயக்குகிறார். இதில் அர்ஜுன் தாஸ் கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக கட்டா குஸ்தி, பொன்னியன் செல்வன் 1, 2 பாகங்களில் நடித்த ஐஸ்வர்யா லக்ஷமி கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.