News August 19, 2025
ராணிப்பேட்டை ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ராணிப்பேட்டை நகரில் வரும் ஆகஸ்ட் 22ஆம் தேதி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் 8ஆம் வகுப்பு முதல் இளநிலை, பொறியியல் பட்டதாரி வரை கலந்து கொள்ளலாம். <
Similar News
News February 7, 2026
ராணிப்பேட்டை: பயிற்சியை ஆய்வு செய்த கண்காணிப்பாளர்

இராணிப்பேட்டை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் வாராந்திர உடற்பயிற்சி நடைபெற்றது. இந்த பயிற்சியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அய்மன் ஜமால், பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் உடன் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் குணசேகரன் (CWC), துணை காவல் கண்காணிப்பாளர் குமார் (DCRB), காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்கள் கலந்து கொண்டனர்.
News February 7, 2026
ராணிப்பேட்டை: மூதாட்டி பரிதாப பலி!

ஆற்காடு நக்கீரன் தெருவைச் சேர்ந்த தரணி பாய் (78) என்ற மூதாட்டி, வியாழக்கிழமை அண்ணா சிலை அருகே சாலையைக் கடந்தபோது அதிவேகமாக வந்த சரக்கு வாகனம் அவர் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவர், ஆற்காடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து ஆற்காடு நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்திய வாகனம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
News February 7, 2026
ராணிப்பேட்டை: கும்பாபிஷேகத்தில் 20 சவரன் நகை திருட்டு

ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் சோழபுரீஸ்வரர் திருக்கோவில் கும்பாபிஷேக விழா நேற்று நடைபெற்றது. இந்நிலையில் கூட்டத்தில் உள்ள 5 பெண் பக்தர்களிடம் 20 சவரன் மதிப்புள்ள நகைகள் திருடு போய் உள்ளது. இதில் பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் குடும்பத்தினர் சோளிங்கர் காவல் நிலையத்தில் கண்ணீருடன் புகார் மனுவை அளித்தனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


