News August 19, 2025

தவெக மாநாட்டில் திமுக, அதிமுகவின் முகங்கள்!

image

மதுரையில் ஆக. 21-ல் நடைபெறவுள்ள தவெக மாநாட்டுக்கான பணிகளை, விஜய் முழுவீச்சில் கவனித்து வருகிறார். மாநாட்டு பகுதியில் திமுகவை தோற்றுவித்த அண்ணா, அதிமுகவை தோற்றுவித்த MGR ஆகியோருக்கு பிரமாண்ட பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. 1967, 1977 ஆகிய தேர்தல் மாற்றங்களை குறிப்பிட்டு அவர் பேசிவரும் நிலையில், அப்போது வாகை சூடிய இருவரது படங்களும் வைக்கப்பட்டுள்ளன. இது திமுக, அதிமுகவிற்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

Similar News

News August 20, 2025

அர்ஜுன் தாஸுடன் நடிக்கும் ஐஸ்வர்யா லக்‌ஷமி

image

மாரி 1, 2 பாகங்கள், காதலில் சொதப்புவது எப்படி போன்ற படங்களை இயக்கியவர் பாலாஜி மோகன். இவர் தற்போது காதல் மற்றும் காமெடி கலந்த வெப்தொடர் ஒன்றை இயக்குகிறார். இதில் அர்ஜுன் தாஸ் கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக கட்டா குஸ்தி, பொன்னியன் செல்வன் 1, 2 பாகங்களில் நடித்த ஐஸ்வர்யா லக்‌ஷமி கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

News August 20, 2025

உலகின் காமெடியான விலங்குகள்

image

நமக்குத் தெரியாமல் நம்மை யாராவது போட்டோ எடுத்தால், அதில் நாம் காமெடியாக ஏதாவது செய்திருப்போம். அது போல தான் விலங்குகளும் சில நேரங்களில் காமெடியாக போட்டோக்களில் சிக்கிவிடுகின்றன. இப்படி காமெடி விலங்குகளை போட்டோ எடுப்பவர்களுக்காக போட்டிகள் எல்லாம் நடத்தப்படுகின்றன. அப்படியான போட்டியில் பகிரப்பட்ட சில போட்டோக்களை மேலே கொடுத்துள்ளோம், Swipe செய்து பார்க்கவும்.

News August 20, 2025

ஏழைமக்களின் உடல் உறுப்புகள் திருட்டு கொடூரம்: மதுரை HC

image

ஏழை மக்களின் உடல் உறுப்புகள் திருடப்பட்டது கொடூரம் என நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். நாமக்கல்லில் விசைத்தறி தொழிலாளர்களிடம் கிட்னி திருடப்பட்ட வழக்கை CBI விசாரிக்கக் கோரி மதுரை HC-ல் மனுதாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த நீதிமன்றம், இந்த விவகாரத்தின் அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள், எதிர்காலத்தில் இதனை தடுப்பதற்கான விரிவான நிலை அறிக்கையை அரசு தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

error: Content is protected !!