News August 19, 2025
BIG NEWS: சென்னையில் நாய் கடித்து ஒருவர் பலி

சென்னை குமரன் நகர் பகுதியில் வளர்ப்பு நாய் கடித்து ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வீட்டில் வளர்த்து வந்த பிட்புல் ரக நாய் கடிதத்தில் கருணாகரன்(55) என்பவர் உயிரிழந்தார். அவரை அந்த நாய் தொடை, கழுத்து பகுதிகளில் கடித்துள்ளது. மேலும் நாயின் உரிமையாளர் பூங்கொடியும் காயமடைந்துள்ளார். அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. இது தடை செய்யப்பட்ட நாய் என்பது குறிப்பிடத்தக்கது.
Similar News
News August 20, 2025
மெட்ரோ உதவி எண்கள் செயல்படாது: மெட்ரோ நிர்வாகம்

சென்னை மெட்ரோ ரயில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் பயணம் செய்து வருகின்றனர். அவர்களுக்கு ஏதேனும் உதவி தேவைப்பட்டால், உதவுவதற்கு எண்கள் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த உதவி எண்கள் தற்காலிகமாக செயல்படாது என்று மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. உதவி எண்கள் விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என்று சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தகவல் தெரிவித்தது.
News August 20, 2025
இஸ்ரோ மையத்தில் சென்னை பள்ளி மாணவர்கள்

சென்னை மாநகராட்சிப் பள்ளி மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற்றதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவுக்கு கல்விச் சுற்றுலாவாக இன்று அழைத்துச் செல்லப்பட்டனர். இந்த சுற்றுலாவில், மாணவர்கள் ராக்கெட் ஏவுதல் மற்றும் விண்வெளி தொழில்நுட்பம் பற்றிய பல சுவாரஸ்யமான தகவல்களை நேரடியாகக் கண்டறிந்து உற்சாகத்துடன் கற்றுக்கொண்டனர். இதன் மூலம் மாணவர்களுக்கு விண்வெளி அறிவியல் குறித்த ஆர்வம் மேலும் அதிகரித்தது.
News August 19, 2025
சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்

விநாயகர் சதுர்த்தியையொட்டி, சுற்றுச்சூழலுக்கு உகந்த சிலைகளையே பயன்படுத்த வேண்டும். பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ், ரசாயன சாயங்கள், பிளாஸ்டிக், தெர்மாகோல் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும். சிலைகளை அரசால் அனுமதிக்கப்பட்ட நீர்நிலைகளில் மட்டுமே கரைக்க வேண்டும். பொதுமக்கள் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க ஒத்துழைக்குமாறு சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே கேட்டுக்கொண்டுள்ளார்.