News August 19, 2025
FLASH: கூடும் ‘கூலி’ கலெக்ஷன்.. U/A சான்று கேட்டு வழக்கு

‘கூலி’ படம் 5 நாள்களில் சுமார் ₹450 கோடியை வசூலித்து சாதனை படைத்துள்ளது. படத்தில் வன்முறை காட்சிகள் அதிகம் என கூறி தணிக்கை வாரியம் A (18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே பார்க்க முடியும்) சான்று வழங்கியது. இதனால், பலரும் குடும்பத்துடன் படம் பார்க்க முடியாமல் போனது. இந்நிலையில், U/A சான்று கேட்டு ஐகோர்ட்டில் படக்குழு வழக்கு தொடர்ந்துள்ளது. U/A சான்று கிடைத்தால் வசூல் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
Similar News
News March 4, 2026
ராசி பலன்கள் (04.03.2026)

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.
News March 4, 2026
ஈரான் பேச்சுவார்த்தைக்கு ரெடி… NO சொல்லும் டிரம்ப்

ஈரான் மீதான அமெரிக்க – இஸ்ரேல் போர் 4-வது நாளாக தொடர்கிறது. ஈரானும் பதிலுக்கு வளைகுடா நாடுகளில் தாக்குதலை தொடுத்து வருகிறது. இதனிடையே ஈரானின் விமானப்படை, கடற்படை மற்றும் தலைமை அழிக்கப்பட்டுவிட்டதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். இப்போது அவர்கள் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாகவும், ஆனால் அதற்கான நேரம் கடந்துவிட்டதாகவும் டிரம்ப் கூறியுள்ளார்.
News March 4, 2026
சாதிய விஷம் விதைப்பவர்களை கைது செய்க: மாரி செல்வராஜ்

நாங்குநேரியில் சாமானிய மக்கள் மீது சமூகவிரோதிகள் சிலர் நிகழ்த்தியுள்ள<<19286535>> கொலைவெறி தாக்குதல்<<>> பெரும் மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளதாக மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார். வெறும் போதை திமிரில் தொடர்ந்து தென்மாவட்டங்களில் சாதிய பெருமிதங்களை விஷமாக விதைத்து வரும் சமூக விரோதிகளை அடையாளம் கண்டு சிறைபடுத்தவும், வன்முறையற்ற சமூக பிளவுகளற்ற TN-க்கான நம்பிக்கையை உருவாக்குமாறும் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.


