News August 19, 2025
இனி ரயிலில் Luggage கொண்டு செல்ல கடும் விதிகள்!

ரயில் பயணத்தின் பெரும் சிக்கலே, மிகப்பெரிய Luggage முட்டைகள் தான். இதைத் தீர்க்க, இந்திய ரயில்வே, விமான பயணங்கள் போல Luggage எடை சரிபார்ப்பு பிறகே, பயணிகளை ரயிலில் அனுமதிக்க திட்டமிட்டு வருகிறது. இந்த முறை பிரயாக்ராஜ் டிவிஷனில் சோதனை செய்யப்படவுள்ள நிலையில், குறிப்பிட்ட எடைக்கு மேலே Luggage எடுத்து சென்றால், அபராதம் விதிக்கவும் பரிசீலிக்கப்படுகிறது. இது குறித்து நீங்க என்ன நினைக்கிறீங்க?
Similar News
News March 19, 2026
ஜன நாயகன் படம் ரிலீஸ்.. வெளியான புது அப்டேட்

‘ஜன நாயகன்’ படம் ரிலீஸ் குறித்து தலைமை தேர்தல் ஆணையம்தான் விளக்கமளிக்கும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார். தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக படத்தை வெளியிட தேர்தல் ஆணையத்தின் ஒப்புதலை பெற வேண்டுமா என்று அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு ‘ஜன நாயகன்’ படத்தை சென்சார் போர்டு மறு ஆய்வு செய்துள்ளது. தற்போது தேர்தல் ஆணையத்தின் ஒப்பதலுக்காக அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
News March 19, 2026
CSK-வுக்கு பெரும் பின்னடைவு.. முக்கிய வீரர் காயம்

காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து CSK வீரர் நாதன் எல்லிஸ் விலகியுள்ளார். டெத் ஓவர்களில் பவுலிங் செய்வதற்கு நாதன் எல்லிஸை மலை போல் நம்பியிருந்த நிலையில், அவரது விலகல் CSK அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இதனால் மாற்று வீரரை தேடும் முயற்சியில் அணி நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. இதில் தாமதம் ஏற்பட்டால் மேட் ஹென்றி பிளேயிங் 11-ல் இடம்பெறுவார். CSK எந்த வீரரை தேர்வு செய்யணும்? கமெண்ட் பண்ணுங்க
News March 19, 2026
ரம்ஜான் விடுமுறை.. நாளை முதல் சிறப்பு ரயில்கள் இயக்கம்

ரம்ஜான் விடுமுறையையொட்டி மக்கள் நெரிசலின்றி ஊர்களுக்குச் செல்ல சென்னை – குமரி இடையே 2 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. எழும்பூரில் இருந்து நாளை இரவு 11.45 மணிக்கு புறப்பட்டு குமரி செல்லும் ரயிலுக்கான முன்பதிவு தொடங்கியுள்ளது. மறுமார்க்கத்தில் 22-ம் தேதி இரவு 11.25-க்கு புறப்பட்டு ரயில், அடுத்த நாள் காலை 11.15 மணிக்கு ரயில் சென்னையை வந்தடையும். இதற்கான முன்பதிவு நாளை காலை தொடங்கவுள்ளது. SHARE


