News August 19, 2025

ஈரோடு மாவட்டத்தில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்

image

ஈரோடு மாவட்டத்தில், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் சார்பில் வரும் 22ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் காலை 10.00 மணி முதல் மதியம் 3.00 மணி வரை நடைபெறும் இம்முகாமில் வேலை நாடுநரும், வேலை வழங்குநரும் இலவசமாக பங்கேற்கலாம். மேலதிக தகவலுக்கு 86754 12356, 94990 55942 என்ற எண்களில் தொடர்புகொள்ளலாம்.

Similar News

News August 20, 2025

காவிரி ஆற்றில் விசைப்படகு போக்குவரத்து சேவை நிறுத்தம்

image

ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே உள்ள நெருஞ்சிப்பேட்டை மற்றும் சேலம் மாவட்டம் பூலாம்பட்டி இடையே காவிரி ஆற்றில் விசைபடகு போக்குவரத்து சேவையானது நாள்தோறும் இயக்கப்பட்டு பொதுமக்கள் பயணம் செய்து வந்த நிலையில் மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் உபரி நீரின் அளவானது 70 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளதால் மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பெயரில் தற்காலிகமாக படகு சேவை ஆகஸ்ட் 19 முதல் நிறுத்தப்பட்டுள்ளது.

News August 19, 2025

ஈரோடு அருகே கல்லூரி மாணவி தற்கொலை

image

வெள்ளித்திருப்பூர் மொசக்கவுண்டனூர் சேகர் மகள் கார்த்திகா இவர் நாமக்கல்லில் உள்ள கல்லூரியில் BSC இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார் மாணவி கல்லூரிக்கு செல்ல மாட்டேன் எனக் கூறியதால் பெற்றோர் திட்டியுள்ளனர் மனமுடைந்த மாணவி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் இதுகுறித்து வெள்ளி திருப்பூர் போலீசார் விசாரணை நடத்தி மாணவியின் பிரேததத்தை பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

News August 19, 2025

ஈரோட்டில் இன்றைய வெப்பம் பதிவு

image

ஈரோடு மாவட்டம் முழுவதும் கடந்த மாதம் கனமழை பெய்து வந்ததால், வெயிலின் தாக்கம் குறைந்து இருந்தது. இருப்பினும், அக்னி நட்சத்திரம் நிறைவடைந்த பின் ஈரோடு மாவட்டத்தில் மீண்டும் வெயிலின் தாக்கம் காணப்படுகிறது. இந்நிலையில், இன்று ஈரோட்டில் 37.6° செல்சியஸ் பதிவாகியுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர்

error: Content is protected !!