News August 19, 2025
பஞ்சாயத்தை சீக்கிரம் முடிங்க.. அதிமுக அனுப்பிய தூது!

2026 தேர்தலுக்காக வலுவான கூட்டணியை அமைக்க ADMK தீவிரம் காட்டி வருகிறது. தற்போது ADMK-வுடன் BJP என்ற பெரிய கட்சி மட்டுமே இருப்பதால், வலுவான கூட்டணி இல்லை என்ற விமர்சனங்களுக்கு ஆளாகியுள்ளது. இதனால், விரைவாக PMK, DMDK-வை சேர்க்க திரை மறைவில் பேச்சுவார்த்தை நடக்கிறதாம். குறிப்பாக, PMK-வில் தந்தை – மகன் மோதலுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு இணைந்து செயல்பட அன்புமணிக்கு தூது அனுப்பப்பட்டுள்ளது.
Similar News
News March 16, 2026
அதிமுகவை பாஜக விழுங்கி துப்பிவிடும்: உதயநிதி

நம்மிடம் கார் இல்லையென்றால், காரை புக் செய்து செல்வோம்; அதேபோன்று அதிமுகவை புக் செய்து பாஜக பயன்படுத்துகிறது என உதயநிதி விமர்சித்துள்ளார். சென்னையில் பேசிய அவர், தேர்தலுக்குப் பிறகு நிதிஷ்குமாரை CM பதவியிலிருந்து பாஜக ஓரம்கட்டிவிட்டது; அவருக்கே இந்த நிலை என்றால், ஊர்ந்து சென்ற EPS-யும் ஊதித்தள்ளிவிடும் என்றார். தேர்தலுக்கு பிறகு அதிமுகவை பாஜக விழுங்கி துப்பிவிடும் எனவும் சாடியுள்ளார்.
News March 16, 2026
திமுக மா.செ.,க்கள் கூட்டம் தொடங்கியது

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மா.செ.க்கள் கூட்டம் தொடங்கியுள்ளது. மூத்த அமைச்சர்கள், முக்கிய நிர்வாகிகள் இக்கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். இதில், தேர்தல் பணி, கூட்டணி தொகுதிப்பங்கீடு, வேட்பாளர் தேர்வு, தேர்தல் வாக்குறுதி உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்படுவதாக கூறப்படுகிறது.
News March 16, 2026
என்னை ஏமாத்திட்டாங்க.. வேதனையில் குஷ்பு!

அமேசான் தன்னை ஏமாற்றிவிட்டதாக நடிகை குஷ்பு கோபத்துடன் பதிவிட்டுள்ளார். தாயாருக்காக விலையுயர்ந்த Furniture ஒன்றை ஆர்டர் செய்த நிலையில், டெலிவரியே செய்யாமல் டெலிவரி செய்து விட்டதாக ஏமாற்றுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த 40 நாள்களாக இது குறித்து கஸ்டம்ர் கேரில் பேசி வருவதாகவும், தற்போது ஒருவர் ‘என்ன ஆக்ஷன் வேண்டுமானாலும் எடுத்துக்கோங்க’ என அலட்சியமாக பதிலளிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.


